பிரபல இயக்குனர், சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரெயிஸ்' இரண்டு பாகமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான நிலையில், இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், வசூல் ரீதியாக உலகம் முழுவதும் சுமார் சுமார் 350 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
'புஷ்பா' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வேறு லெவலுக்கு பிரபலமானது. குறிப்பாக ரஷ்மிகா மந்தனா ஆடிய சாமி பாடல், சமந்தா ஆடிய ஓ சொல்றியா மாமா பாடல், மற்றும் அல்லு அர்ஜுன் தன்னுடைய வித்யாசமான நடன திறமையை வெளிப்படுத்திய ஸ்ரீவள்ளி பாடல் ஆகியவை.
இது குறித்து அவர் கூறுகையில், ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த போது... அல்லு அர்ஜுன் நடனமாடிய ஸ்ரீ வள்ளி பாடலில் செருப்பு திடீரென கழண்டு விழுவது போல் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த காட்சி தற்செயலாக நடந்ததா? அல்லது நடன அமைப்பா என அல்லு அர்ஜுனிடம் கேட்டுள்ளார்.