உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் தாமரைச் செல்வி.
மற்ற போட்டியாளர்களை விட பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த தாமரைக்கு 5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு வெளியேற வாய்ப்பு இருந்தும்... அதனை மறுத்துவிட்டார். இதனால் பிக்பாஸ் பார்வையாளர்களின் அபிமான போட்டியாளர்கள் லிஸ்டில் இவரும் இணைந்தார்.
தற்போது, பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 போட்டியில்... தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டு தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தாமரைக்கு இருக்கும் ரசிகர்களை விட அவரது கணவருக்கு அதீத ரசிகர்கள் உள்ளனர்.
இதில், தாமரை செல்வி மற்றும் அவரது கணவர் இருவரும், புது பொண்ணு - மாப்பிள்ளை போல் மாலையும், கழுத்துமாக மணக்கோலத்தில்... உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது இந்த போட்டோஸ் வேற லெவலுக்கு சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.