Actress Poorna Marriage : நிச்சயத்தோடு நின்றுபோனதா நடிகை பூர்ணாவின் திருமணம்? - அவரே சொன்ன பதில் இதோ

Published : Aug 12, 2022, 03:05 PM IST

Actress Poorna Marriage : நடிகை பூர்ணாவின் திருமணம் நிறுத்தப்பட்டதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

PREV
14
Actress Poorna Marriage : நிச்சயத்தோடு நின்றுபோனதா நடிகை பூர்ணாவின் திருமணம்? - அவரே சொன்ன பதில் இதோ

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் பூர்ணா. இவருக்கும் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயமானது. அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.

24

இதனிடையே, நடிகை பூர்ணாவின் திருமணம் நிறுத்தப்பட்டதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் அதற்கான காரணம் என்ன என நடிகை பூர்ணாவிடமே சமூக வலைதளம் வாயிலாக வினவி வந்தனர். இந்நிலையில், அந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார் பூர்ணா.

இதையும் படியுங்கள்... இரண்டே வாரத்தில் முடிவுக்கு வந்த தி லெஜண்ட் பட வசூல் வேட்டை! அறிமுக படத்திலேயே அண்ணாச்சி படைத்த மாபெரும் சாதனை

34

அதில் தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘எப்போதும் என்னுடையவர்’ என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவின் மூலம் திருமணம் நிறுத்தப்பட்டதாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பூர்ணா. விரைவில் தனது திருமண தேதியையும் வெளியிட அவர் திட்டமிட்டு உள்ளாராம்.

44

நடிகை பூர்ணா கைவசம் தற்போது பிசாசு 2 திரைப்படம் உள்ளது. மிஷ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பூர்ணா. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதில் நடிகர் விஜய் சேதுபதியும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... விருமன் படத்தில் மாஸ்டர் பட BGM-ஆ..! அனிருத்தை காப்பி அடித்தாரா யுவன்? - கிளம்பிய புது சர்ச்சை

click me!

Recommended Stories