'கன்னத்தில் முத்தமிட்டால்' சீரியலில் இருந்து விலகியது ஏன்? பகீர் காரணங்களால்... பரபரப்பை ஏற்படுத்திய நடிகை!

First Published | Aug 12, 2022, 2:00 PM IST

நடிகை மனிஷாஜித், 'கன்னத்தில் முத்தமிட்டால்' சீரியலில் இருந்து விலகியது ஏன்? என்பது குறித்து தற்போது கூறியுள்ளார்.  
 

ஒரே மாதிரியான கதைக்களத்தை ரசிகர்களுக்கு கொடுக்காமல், வித்தியாசமாக எடுக்கப்படும் சீரியல்களுக்கு எப்போதுமே சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. 

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், குறிப்பிட்ட சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில் ஒன்று தான் 'கன்னத்தில் முத்தமிட்டால்' சீரியல். 

மேலும் செய்திகள்: எல்லை மீறிய கவர்ச்சி... பேன்ட் போடாமல் ஷர்ட் மட்டும் அணிந்து... பப்பி ஷேமாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!
 

Tap to resize

இது இந்தி சீரியலான 'துஜ்சே ஹை ராப்தா'வின் ரீமேக் ஆகும்.  இது மாற்றாந்தாய் (சித்தி) மற்றும் மகள் இடையான உறவு, பிரச்சனைகள் போன்றவற்றை மையமாக வைத்து இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சீரியலில் ஆதிரா என்கிற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மனிஷாஜித். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போலவே தோற்றமளிக்கும் இவரது முகம், மற்றும் எதார்த்தமான நடிப்பு இவரை மிக விரைவிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது. தனது நடிப்பிற்காக தொடர்ந்து நல்ல விமர்சனங்களைப் பெற்று வந்தார்.

மேலும் செய்திகள்: Holy Wound : பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஓடிடியில் வெளியாகும் லெஸ்பியன் டிராமா "ஹோலி வுண்ட்" !
 

ஆனால் திடீரென சீரியலில் இருந்து விலகிவிட்டார். அவர் திடீரென சீரியலில் இருந்து வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் என்ன காரணத்திற்காக சீரியலில் இருந்து விலகினார் என்பதற்கான காரணமும் வெளியாகாமல் இருந்த நிலையில், சில பகீர் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து ஒரு நாளைக்கு 14 மணி நேரம் சீரியலில் நடிக்க வேண்டியுள்ளது. உடல்நிலை சரியில்லை என்றால் கூட, ஷூட்டிங் வரவேண்டும் என கூறுவார்கள். அவ்வபோது சிறு சிறு விபத்துகள் நடக்கும் அதை கண்டுகொள்ள மாட்டார்கள். எனவே ஷூட்டிங் செல்லும் இடத்தில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்றும், தங்களுக்கான சம்பளமும் முறையாக வழங்கப்படுவது இல்லை என பகீர் கிளப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்: கணவர் இறந்த பின் வீட்டுக்குள் முடங்கிய மீனா... வெளியே அழைத்து வந்த இரு பிரபலங்கள்! வைரலாகும் பீச் போட்டோஸ்!
 

இதுவரை சுமார், 6 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி உள்ளதாகவும்... இதனையெல்லாம் நான் கேட்டதால் வேறு நடிகையை நாங்கள் தேர்வு செய்துவிட்டோம் இனி நீங்கள் நடிக்க வரவேண்டாம் என கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். மனிஷாஜித்தின் இந்த விளக்கம் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தான் 'கன்னத்தில் முத்தமிட்டால்' சீரியல் குழு தங்களுடைய 100 ஆவது எபிசோட் நிகழ்ச்சியின் வெற்றிவிழாவை கொண்டாடியது. இதில் மனிஷாஜித்தும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

click me!