Published : Aug 12, 2022, 04:18 PM ISTUpdated : Aug 12, 2022, 04:20 PM IST
கோலாகலமாக மாமல்லபுரத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் முதல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் வரை பிரபலங்கள் பலரும் வருகை தந்து வாழ்த்தி இருந்தனர்.
இரண்டு சதாப்தங்களுக்கு மேலாக ஹோலிவுட் திரையுலகில் மகுடம் சூடாத ராணியாக வலம் வருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சிம்மாசனம் அமைத்துக் கொண்ட இவர். சமீபத்தில் திருமணம் ஆன புதுமண பெண்ணாக மணம் வீசி வருகிறார்.
27
nayanthara - vignesh shivan
ஆனாலும் நயன்தாராவின் திருமணம் ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கக்கூடிய செய்தியாகவே இருக்கிறது. ஏழு வருட காதலுக்கு பிறகு பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை ஜூலை 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் லேடி சூப்பர் ஸ்டார்.
கோலாகலமாக மாமல்லபுரத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் முதல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் வரை பிரபலங்கள் பலரும் வருகை தந்து வாழ்த்தி இருந்தனர். இதுகுறித்தான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்று வந்தார்.
பின்னர் புதுமண தம்பதிகள் இருவரும் ஹனிமூனிற்காக தாய்லாந்து சென்றனர். அங்கு இவர்கள் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் போட்டோக்களும் பிரபலமானது. இதற்கிடையே பிரபல ஓடிடித்தளம் ஒன்று நயன்தாரா - விக்கி கல்யாண வீடியோவை வெளியிட தயாராகி வருகிறது.
57
nayanthara - vignesh shivan
திருமணம் முடிந்த கையோடு சமீபத்தில் நடைபெற்ற 44-வது ஒலிம்பியாட் துவக்க விழாவை இயக்க ஒப்பந்தமான விக்னேஷ் சிவன் அந்த பணிகளில் பிஸியாக இருந்தார். இதன் காரணமாக சில நாட்களாக இவர்களது ரொமான்டிக் போட்டோக்கள் வெளியாகாமல் இருந்தது.
67
nayanthara - vignesh shivan
இதையடுத்து சமீபத்தில் கடற்கரையில் இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் தற்போது இருவரும் மீண்டும் வெளிநாடு புறப்பட்டு உள்ளனர். இது குறித்த தகவலை பகிர்ந்து கொண்ட விக்கி 'தொடர்ச்சியான வேலைகளுக்குப் பிறகு இங்கே நாம் நமக்காக சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறோம் என பதிவிட்டு தனது மனைவி நயன்தாராவின் கைகளை முத்தமிடுகிறார்.
விமானத்திலிருந்து இவர்களின் ரொமான்ஸ் போட்டோ வெளியாகியுள்ளது. ஸ்பெயின், பார்சிலோனியா நகரத்திற்கு இவர்கள் இரண்டாவது ஹனிமூனுக்காக பறந்துள்ளனர். இந்த காதல் ஜோடியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.