தமிழில் கற்றது தமிழ் என்னும் படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் அஞ்சலி. பின்னர் அங்காடித்தெரு, தூங்காநகரம், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் தோன்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
25
anjali
இந்த படங்களை தொடர்ந்து எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் இரண்டு நாயகிகளில் ஒருவராக தோன்றியிருந்தார் அஞ்சலி. பின்னர் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்த இவர் பின்னர் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி தோற்றங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க தொடங்கியவர் புசுபுசுவென இருந்த உடலை உடற்பயிற்சி மூலம் ஒல்லி பெல்லியாக மாற்றி உள்ளார். அவ்வப்போது இவர் வெளியிடும் அசத்தலான புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் சிறப்பு தோற்றம், பாடல்களுக்கு கிளாமர் நடனம் என கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி வரும் அஞ்சலி, சமீபகாலமாக தமிழ் படங்களில் பெரும்பாலும் ஒப்பந்தமாக வில்லை.
சமீபத்தில் இவர் வெளிநாட்டுக்கு சென்று வெள்ளை நிற டைட் உடையில் எடுத்துக்கொண்ட சில படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகின. இந்நிலையில் கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட பிளவுஸ் மற்றும் பாவாடையுடன் இவர் கொடுத்துள்ள கிக் லுக் போஸ் கவர்ந்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.