59 வயதாகும் பாலிவுட் திரையுலகை சேர்ந்த காமெடி நடிகரும், குணச்சித்திர நடிகருமான ராஜு ஸ்ரீவஸ்தவா, கடந்த புதன்கிழமை அன்று , புது தில்லியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, திடீர் என ஏற்பட்ட லேசான மாரடைப்பு காரணமாக கீழே சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகிறார்கள்.
மருத்துவமனையில் அனுமதித்த போது, சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.