இயக்குனர் முத்தையா, கிராமத்து மண்மனம் மாறாமல் இப்படத்தை இயக்கி உள்ளார். ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், அதை திறம்பட கையாண்டுள்ள இவர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம். எமோஷனல் காட்சிகள் மற்றும் வசனங்கள் படத்திற்கு பலமாக அமைந்தாலும், அதுவே பல இடங்களில் பலவீனமாகவும் அமைந்துள்ளன. அதனை சற்று கவனித்து இருந்தால் விருமன், கொம்பன் ரேஞ்சுக்கு கொண்டாடப்பட்டு இருப்பான்.
யுவனின் இசையில் பாடல்கள் சூப்பர், ஆனால் பின்னணி இசை பெரிதாக கவரும்படி இல்லை. செல்வகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. படம் பார்க்கும்போது கிராமத்துக்கே சென்று வந்த உணர்வை கொடுத்துள்ளார்.