சினிமா பிரபலங்களின் மகனோ அல்லது மகளோ, சினிமாவில் அறிமுகமானால் அதிகளவில் எதிர்பார்ப்பு இருக்கும். அத்தகைய எதிர்பார்ப்புடன் தமிழ் சினிமாவில் புது வரவாக காலடி எடுத்து வைத்திருப்பவர் அதிதி ஷங்கர். இயக்குனர் ஷங்கரின் மகளான இவர் டாக்டர் படிப்பை முடித்தவுடன் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் நடிக்க வந்துவிட்டார்.
இவர் சினிமாவில் நடிக்க உள்ள செய்தி அறிந்ததும், ஷங்கர் மகள் ஹீரோயினா என பலரும் ஆச்சர்யப்பட்டனர். அதுவும் இவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதும், அதிதி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அதுவும் முதல் படத்திலேயே கிராமத்து நாயகியாக நடித்துள்ளார் அதிதி.
இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதால் அதிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக சர்ச்சைகளும் எழுந்தன. இதற்கெல்லாம் மத்தியில் தற்போது விருமன் படம் ரிலீசாகி உள்ளது. இப்படத்தில் அதிதியின் நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன. படம் பார்த்தவர்கள் பெரும்பாலானோர் சொல்லும் ஒரே விஷயம் அதிதியை படத்தில் பார்க்கும் போது முதல் படத்தில் நடித்தது போல் தெரியவில்லை, சிறப்பாக நடித்துள்ளார் என்பது தான்.
சிலரோ ஷங்கர் மகள் இப்படி சூப்பரா நடிப்பாங்கனு எதிர்பார்க்கல என அதிதியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மகளின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருவதனால் இயக்குனர் ஷங்கரும் செம்ம ஹாப்பியாக உள்ளாராம். விருமன் படத்துக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் அதிதி. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Viruman FDFS : கார்த்தியின் விருமன் படத்திற்கு அதிகாலை காட்சி திரையிடப்படாததால் அப்செட் ஆன ஃபேன்ஸ்