அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராக உள்ள படம் ஜெயிலர். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனை சமீபத்திய பேட்டியில் அவரே உறுதிப்படுத்தினார். இதுதவிர வில்லனாக பிரபல கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் நடிக்க உள்ளார். இதுதவிர நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு ஏற்கனவே 3 ஹீரோயின்கள் ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது நான்கவதாக மேலும் ஒரு ஹீரோயின் இணைந்துள்ளார். அது தமன்னா தான். அவரும் தற்போது புது வரவாக இப்படத்தில் இணைந்துள்ளார். ஏற்கனவே விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள தமன்னா, தற்போது முதன்முறையாக ரஜினி உடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அஜித் 61' படத்தின் அடுத்த ஷெட்யூல் எங்கு தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்!