விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
வெற்றிகரமாக தமிழில் 5 சீசன்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, விரைவில் சீசன் 6 ஆரம்பமாக உள்ளது, இந்நிலையில் இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் விவரங்கள் அவ்வப்போது வெளியாக துவங்கியுள்ளது.
இவர்களை தொடர்ந்து இந்த பட்டியலில் தற்போது இரண்டு நடிகர்கள் மற்றும் ஒரு மாடல் என மூன்று முக்கிய பிரபலங்களின் பெயர் அடிபட்டு வருகிறது.
அதே போல் பிப்ரவரி 14 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி, பின்னர்... அஞ்சாதே, கோ, நெற்றிக்கண் என பல படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் மிரட்டியுள்ள அஜ்மல் தற்போது வரை தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும் நிலையில்... பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
பல்வேறு விளம்பரங்களில் நடித்து வரும் அஜய் மெல்வின் என்பவர் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்த கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இவர் கோல்கேட் மற்றும் ஈனோ ஆகிய விளம்பரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் என்பது குறிபிடித்தக்கது.