
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் வளர்த்திருப்பதற்கு அவருடைய அண்ணன் செல்வராகவன் ஒரு முக்கிய காரணம். தனுஷின் முதல் படமான 'துள்ளுவதோ இளமை' படத்தை இயக்கியது அவருடைய அப்பா கஸ்தூரி ராஜா என்றாலும், இந்த படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி, நடிக்கவே தெரியாத தனுஷை நடிக்க வைத்த பெருமை செல்வராகவனை தான் சேரும்.
முதல் படத்திற்காக பல விமர்சனங்களை தனுஷ் எதிர்கொண்டாலும், இதை தொடர்ந்து தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கிய 2ஆவது படமான 'காதல் கொண்டேன்' இளம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்தப் படத்தை பார்த்த பிறகு ரஜினிகாந்த், தனுஷை அழைத்து மனதார பாராட்டினார். அப்போது தான் தனுஷிற்கும் ஐஸ்வர்யாவிற்கும் இடையே நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது. இதை தொடர்ந்தே இருவரின் பெற்றோரும் கலந்து பேசி இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும், திரையுலகமே மெச்சும் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த நிலையில், திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பின்னர் இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.
கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தான் ஆச்சு; அதற்குள் 2-வது திருமணம் செய்த லப்பர் பந்து நடிகை
தற்போது தமிழ் சினிமாவில் 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திரமாக உள்ள தனுஷ், தேசிய விருது பிரபலமாகவும் அறியப்படுகிறார். தமிழ் திரையுலகை தாண்டி இவருக்கு பாலிவுட் திரையுலகிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதே போல், தெலுங்கு திரையுலகிலும் தனுஷுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
தற்போது தனுஷ் நடிப்பில் 'இட்லி கடை' மற்றும் 'குபேரா' ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இந்த நிலையில் தான், தனுஷ் தன்னுடைய பழைய பேட்டியில் மனைவி ஐஸ்வர்யா பற்றி பகிர்ந்து கொண்ட ஒரு கருத்து கவனம் பெற்றுள்ளது. தொகுப்பாளர், 'காதல் கொண்டேன்' படத்திற்காக ரஜினிகாந்த் உங்களை அழைத்து பாராட்டி விட்டு பொண்ணையும் கொடுத்தாரா? என காமெடியாக கேட்டதற்கு... தனுஷ் "ஆமாம் தலைவர் என்னை அழைத்து பாராட்டியது உண்மை தான்". ஆனால் பொண்ணு அவர் கொடுக்கல அதுவாவே விழுந்துவிட்டது என கூறியுள்ளார்.
தனுஷை திருமணம் செய்து கொண்ட பின்னர், ஐஸ்வர்யா கணவனவரையே வைத்து '3' படத்தை இயக்கினார். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்ட பட்டாலும், வசூலில் வெற்றிபெறவில்லை. ஆனால் பல வருடங்கள் கழித்து, தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி கண்டது. தனுஷுக்கு தெலுங்கில் அதிக ரசிகர்கள் உருவாவதற்கு இந்த படமும் ஒரு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா கடைசியாக 'லால் சலாம்' படத்தை இயக்கி இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், படு தோல்வியை சந்தித்தது.
மேலும் தனுஷும், விவாகரத்துக்கு பின்னர் படங்கள் இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் ஏற்கனவே இயக்கிய பா.பாண்டி படம் வெற்றி பெற்ற நிலையில், தன்னுடைய 50-ஆவது படத்தையும் அவரே இயக்கி நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது தன்னுடைய சகோதரி மகன் ஹீரோவாக நடித்துள்ள 'நிலவுக்கு என் மேல்' என்னடி கோவம் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். அதே போல் இட்லி கடை என்கிற படத்தையும் இயக்கி நடித்து வருகிறார். தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து பெற்று பிரிந்தாலும் அவர்களை பற்றிய தகவல்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வட்டமிடுகிறது. அந்த வகையில் தான் தனுஷ் தன்னுடைய முன்னாள் மனைவி ஐஸ்வர்யா உடனான காதல் பற்றி பேசியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.
ஊர்வசி படைத்த சாதனை; இதுவரை எந்த நடிகைக்கும் கிடைத்திடாத பெருமை!