
Samantha Talk About Women Divorce and Marriage : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சமந்தா. விஜய்யுடன் இணைந்து தெறி மற்றும் மெர்சல் என்று ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார். கடந்த 2 ஆண்டுகளாக சினிமா வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கி இருக்கிறார். ஆனால், இப்போது வெப் சீரிஸில் முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதைத் தொடர்ந்து நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், இதுவரையில் சமந்தா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சமீபத்தில் சமந்தாவின் அப்பா உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் திருமணம் செய்து, விவாகரத்து பெற்ற ஒரு பெண் என்ற முறையில் விவாகரத்து பெற்ற பெண்களின் நிலை என்ன, அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது குறித்து சமந்தா பேசியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட சமந்தா விவாகரத்து விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பெண்கள் வட்டத்தில் விவாகரத்து பெற்றவர்களின் கதை என்ன என்பதை சமந்தா வெளிப்படையாகக் கூறியுள்ளார். ஆண்கள் விவாகரத்து பெற்றால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. ஏனென்றால் நான் ஆண் அல்ல பெண். அதனால் நான் பெண்களைப் பற்றி மட்டுமே பேசுகிறேன். ஒரு பெண் விவாகரத்து பெறும்போது, அவள் நிறைய அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
அது எந்த அளவுக்குப் போகும் என்றால் செகண்ட் ஹேண்ட், பயன்படுத்தப்பட்டது, வீணான வாழ்க்கை' என்றெல்லாம் சொல்வார்கள். அதுமட்டுமல்ல, உங்களை ஒரு மூலைக்குத் தள்ளுவார்கள். ஒரு பெண் விவாகரத்து பெற்றால், பெண்கள் வட்டத்தில் அவர்களை குற்றவாளி போல பார்ப்பார்கள். மேலும், அவர்கள் வாழ்க்கையில் தோற்றுவிட்டார்கள் என்று நினைப்பார்கள். அவர்களை விதவிதமாக அவமானப்படுத்துவார்கள். நீங்கள் ஒருமுறை விவாகரத்து பெற்றவர் என்று தெரிந்தால், உங்களைப் பெண்கள் கூட்டம் பார்ப்பதே மாறிவிடும்.
நீங்கள் ஒருமுறை திருமணம் செய்து கொண்டீர்கள், ஆனால் இப்போது இல்லை என்று கேலி செய்வார்கள். நம் சமூகத்தில் அப்படி, அதாவது விவாகரத்து ஆன பெண்கள், அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் நிறைய வேதனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். காரணம், சமூகம் விவாகரத்து ஆனவர்களைப் பார்ப்பதே விசித்திரமாக இருக்கிறது. அதை இப்படியும் சொல்லலாம், விவாகரத்து ஆனவர்களை சமூகம் விசித்திரமான மனிதர்கள் போலப் பார்க்கிறது.
நான் சமூகம் என்று சொல்லும்போது, அது பெண்கள் சமூகம். ஏனென்றால், நான் பெண், ஆண் அல்ல, அதனால்தான் நான் எதைப் பேசினாலும் பெண்களைப் பற்றி மட்டுமே பேசுகிறேன். ஏனென்றால், ஆண்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது' என்று பிரபல நடிகை சமந்தா கூறியுள்ளார். ஆம், நடிகை சமந்தா வாழ்க்கையில் திருமணம், விவாகரத்து இரண்டையும் பார்த்துள்ளார். அதனால், பெண்கள் சமூகம், குடும்பத்தலைவிகள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களை எப்படிப் பார்ப்பது என்ற வித்தியாசமான புரிதல் அவருக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.