சினிமாவை விட்டு மகள் விலகலா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த திரிஷாவின் அம்மா

Published : Jan 27, 2025, 10:15 AM IST

திரிஷா நடிப்பை விட்டு விலகுவதாகவும், அரசியலில் இணைய உள்ளதாகவும் பரவிய வதந்திகள் குறித்து அவரது தாயார் உமா கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

PREV
14
சினிமாவை விட்டு மகள் விலகலா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த திரிஷாவின் அம்மா
சினிமாவை விட்டு மகள் விலகலா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த திரிஷாவின் அம்மா

நாயகியாக தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பா நடிச்சிட்டு இருக்காங்க திரிஷா. ஒரு கட்டத்துல கல்யாணம் நிச்சயமாகி, மாப்பிள்ளை நடிக்கக் கூடாதுன்னு சொன்னதால திரிஷா அந்தக் கல்யாணத்தை நிறுத்திட்டாங்கன்னு கூட கோலிவுட்ல பேச்சு அடிபட்டது. இந்த நிலையில, திரிஷா நடிப்பை விட்டு விலகப் போறாங்கன்னு சமீபத்துல ஒரு வதந்தி பரவிச்சு. நடிப்பை விட்டுட்டு, நடிகர் விஜய் ஆரம்பிச்ச தமிழக வெற்றிக் கழகத்துல திரிஷா சேரப் போறாங்கன்னு பேச்சு அடிபட்டுச்சு.

24
Trisha

ஆனா, இந்த வதந்தியை நடிகை திரிஷாவோட அம்மா உமா கிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்திருக்காங்க. திரிஷா நடிப்பை விட மாட்டாங்க என்றும் அரசியலுக்கும் போக மாட்டாங்கன்னும் திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் ஏசியாநெட் நியூஸுக்கு அளித்த பேட்டியில சொல்லிருக்காங்க. திரிஷா தொடர்ந்து சினிமாலயே தொடர்வாங்கன்னும் அவருடைய அம்மா உறுதிப்படுத்தியிருக்காங்க. இப்போ அரை டஜன் படங்களுக்கு மேல திரிஷா நடிச்சிட்டு இருக்காங்க. சில படங்கள் ரிலீஸுக்காக வெயிட் பண்ணுது. 

இதையும் படியுங்கள்... வயசானாலும் திருமணமே செய்யாமல் டிமிக்கி கொடுக்கும் முரட்டு சிங்கிள் நடிகைகள்!

34
Trisha Mother Uma Krishnan

டொவினோ தாமஸ்கூட நடிச்ச 'ஐடென்டிட்டி' தான் இந்த வருஷம் திரிஷாவோட முதல் ரிலீஸ். அந்தப் படத்தோட வெற்றிக்குப் பிறகு, பிப்ரவரி 6-ம் தேதி அஜித் நடிச்ச 'விடாமுயற்சி' தியேட்டர்கள்ல ரிலீஸாகுது. அஜித்துக்கு ஜோடியா நடிச்ச இன்னொரு படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படம் ஏப்ரல் 10-ம் தேதி ரிலீஸாகும்னு எதிர்பார்க்கப்படுது. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்காரு. அடுத்து, மணிரத்னம் இயக்கிய 'தக் லைஃப்' படத்தையும் திரிஷா முடிச்சிருக்காங்க. இந்தப் படத்துல கமல்ஹாசன், சிம்பு முக்கிய கதாபாத்திரங்கள்ல நடிச்சிருக்காங்க. 'தக் லைஃப்' இந்த வருஷம் ஜூன்ல ரிலீஸாகும்.

44
Trisha Not Quit cinema

தற்போது, சூர்யா 45 படத்துல திரிஷா நடிச்சிட்டு இருக்காங்க. ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் இந்தப் படத்துல நடிகர் சூர்யாவுக்கு ஜோடியா திரிஷா நடிக்கிறாங்க. அடுத்து, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் 'மாசானி அம்மன்' படத்துலயும் திரிஷா நாயகியா நடிப்பாங்கன்னு தகவல். தெலுங்குலயும் திரிஷாவுக்கு படம் இருக்கு. தெலுங்குல சிரஞ்சீவிக்கு ஜோடியா 'விஸ்வபம்ரா' படத்துல நடிச்சிருக்காங்க. இந்தப் படமும் விரைவில் தியேட்டர்கள்ல ரிலீஸாகும். திரிஷா சினிமாவை விட்டு விலகப்போவதில்லை என்கிற தகவல் அவரோட ரசிகர்கள குஷியாக்கி இருக்கு.

இதையும் படியுங்கள்...  20 வருஷமா அஜித் - த்ரிஷா காம்போவை சோதிக்கும் பிரச்சனை! விடாமுயற்சியிலும் ஒர்கவுட் ஆகாத சோகம்!

Read more Photos on
click me!

Recommended Stories