20 தடியர்களை வைத்து மிரட்டினார்கள்; பிரபல தொலைக்காட்சி மீது மிஷ்கின் குற்றச்சாட்டு

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க பிரபல தொலைக்காட்சி நிறுவனம் தன்னை மிரட்டியதாக இயக்குனர் மிஷ்கின் கூறி இருக்கிறார்.

20 தடியர்களை வைத்து மிரட்டினார்கள்; பிரபல தொலைக்காட்சி மீது மிஷ்கின் குற்றச்சாட்டு

மிஷ்கின், இயக்குனர் என்பதை தாண்டி சமீபகாலமாக சர்ச்சைக்குரிய மேடைப் பேச்சாளராக மாறி வருகிறார். அண்மையில் பாட்டல் ராதா திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் கலந்துகொண்ட அவர் மேடையில் கொச்சை கொச்சையாக பேசியது மிகவும் சர்ச்சைக்குள்ளானது. அவரின் பேச்சுக்கு கடும் கண்டனங்களும் எழுந்து வந்தன. இந்த நிலையில், நேற்று சென்னையில் வெற்றிமாறன் தயாரித்த பேட் கேர்ள் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் மிஷ்கின்.

Director Mysskin

அப்போது தனது அநாகரீகமான பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர், தன்னை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மிரட்டியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் அவர் பேசியதாவது : “என்னுடைய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை முதல்நாள் ரிலீஸ் ஆகவிடல. ஒருநாள் தாமதமாக அப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் ரிலீஸ் ஆகி 10 நாட்களுக்கு பின் அதன் டிவி ரைட்ஸை வாங்க பிரபல தொலைக்காட்சி நிறுவனம் வந்தார்கள்.

இதையும் படியுங்கள்... "ஹீரோ எவ்வளவு சொல்லியும் கேட்கல" மிஷ்கினின் ஓவர் கான்ஃபிடன்சால் பிளாப் ஆனா படம் - வருந்திய பிரபலம்!


Director Mysskin Speech

அப்போது ஒரு பெரிய இயக்குனர், எனக்கு நெருக்கமானவரும் கூட, அவர் என்னை அழைத்து சென்று உனக்கு நிறைய காசு வாங்கித் தருகிறேன் என அழைத்து சென்றார். அப்போ ஒரு பெரிய அறைக்குள் சென்றேன், அங்கு மொத்தம் 20 பேர் இருந்தார்கள். 75 லட்சம் ரூபாய்க்கு டிவி ரைட்ஸை கொடு என சொன்னார்கள். ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறேன். அது ரொம்ப நல்ல படம் என நான் சொன்னேன். அதற்கு 2 கோடி ரூபாய் தருமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் கொடுக்க முடியாது என சொல்லிக்கிட்டே இருந்தார்கள்.

Mysskin says about onayum aatukuttiyum

அப்போது தான் எனக்கு தெரிந்தது, 20 தடியர்களை வைத்து என்னை மிரட்டி கையெழுத்து போட வைத்தார்கள். எனக்கு 75 லட்சம் ரூபாய் கொடுத்தார்கள். அந்தப் படம் அந்த சேனலில் மட்டும் இதுவரை 80 முறை ஒளிபரப்பாகி இருக்கிறது. அந்த செக்கை எடுத்து வந்து கிழித்து போட்டுவிட்டு சொன்னேன், ஐயா நான் சென்னைக்கு வரும்போது ஒரு வெள்ளை பேப்பரும், பென்சிலோடும் தான் வந்தேன். நான் கஷ்டப்பட்டு திருப்பி வருவேன் என சொன்னேன். என்னை மிரட்டியவர்களில் நான்கு பேர் இறந்துவிட்டார்கள். எனக்கு துரோகம் செஞ்ச அந்த பெரிய டைரக்டர் இன்னும் இருக்கான்” என மிஷ்கின் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... "பின்னிட்ட போ" திவ்யா துரைசாமியை நேரில் அழைத்து மனதார பாராட்டிய மிஷ்கின் - ஏன்?

Latest Videos

click me!