எதிர்நீச்சல் 2-வில் பட்டாசாய் எண்ட்ரி ஆன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
சன் டிவியில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கத்தில் உருவாகி வந்த இந்த சீரியல் தமிழகத்தில் டிஆர்பி-யில் பட்டைய கிளப்பி நம்பர் 1 இடத்தை பிடித்து வந்தது. இந்த சீரியலுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அதில் ஆதி குணசேகரன் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து தான். அவரின் டயலாக்குகள் ஒவ்வொன்றும் மீம் டெம்பிளேட்டுகளாக மாறி சோசியல் மீடியாவில் செம டிரெண்ட் ஆனது.
24
Ethirneechal 2 Serial
இரண்டு ஆண்டுகள் சக்கைப்போடு போட்டு வந்த எதிர்நீச்சல் சீரியல் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் குறுகிய காலகட்டத்தில் முடிவுக்கு வந்ததற்கும் மாரிமுத்து தான் காரணம். அவர் கடந்த 2023-ம் ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் இறப்புக்கு பின்னர் இந்த சீரியலின் போக்கு மாறியது. அவருக்கு பதிலாக நடிக்க வந்த வேல ராமமூர்த்தியும் மாரிமுத்து ரேஞ்சுக்கு செட் ஆகாததால் பாதியிலேயே இந்த சீரியலுக்கு எண்டு கார்டு போட்டு முடித்தார் திருச்செல்வம்.
எதிர்நீச்சல் சீரியலை முடித்த கையோடு, புது கதைக் களத்துடன் அதன் இரண்டாம் பாகத்தை கடந்த மாதம் மீண்டும் தொடங்கினர். எதிர்நீச்சல் தொடர்கிறது என்கிற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த சீரியலில் ஹீரோயினாக பார்வதி நடிக்கிறார். முதல் சீசனில் ஹீரோயினாக நடித்த மதுமிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலுக்கு தாவியதால், அவருக்கு பதில் பார்வதி நடித்து வருகிறார். தற்போது எதிர்நீச்சல் 2 சீரியலும் படிப்படியாக பிக் அப் ஆகி வருகிறது.
44
Serial Actress Sherin
இந்நிலையில், எதிர்நீச்சல் 2 சீரியலில் விஜய் டிவி சீரியல் நடிகை புதிதாக எண்ட்ரி கொடுக்க உள்ள தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் மகளாக நடித்து வரும் பேபி ஷெரின் தான் தற்போது எதிர்நீச்சல் 2 சீரியலில் எண்ட்ரி கொடுக்க உள்ளாராம். அவரின் எண்ட்ரியால் எதிர்நீச்சல் 2 சீரியலில் என்னென்ன ட்விஸ்ட் வர உள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.