ஜன நாயகன் படத்திற்கு விஜய் என்ன சொன்னார்? ஓபனாக பேசிய இயக்குநர் வினோத்!

First Published | Jan 26, 2025, 7:43 PM IST

H Vinoth Talk About Vijay's Jana Nayagan Movie Story : ஜன நாயகன் படத்திற்காக விஜய் என்ன கோரிக்கை வைத்தார் என்பது குறித்து இயக்குநர் எச் வினோத் பேசியது இப்போது வைரலாகி வருகிறது.

Thalapathy 69 Movie Title as Jana Nayagan

H Vinoth Talk About Vijay's Jana Nayagan Movie Story : விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து முழு நேர அரசியல்வாதியான நிலையில் சினிமாவிலிருந்து விலக இருப்பதாக அறிவித்தார். ஆதலால் விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தளபதி 69 படத்தின் டைட்டில் மற்றும் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதன்படி தளபதி 69 படத்திற்கு ஜன நாயகன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாளைய தீர்ப்பு என்று டைட்டில் வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் தளபதி 69 படத்திற்கு ஜன நாயகன் என்று டைட்டில் வைக்கப்பட்டது.

Jana Nayagan Second Look

இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், பூஜா ஹெக்டே, வரலட்சுமி சரத்குமார், மமிதா பைஜூ, மோனிஷா பிளெசி ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் முடிக்கப்பட்டு அக்டோபர் 2025 மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜன நாயகன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சாட்டை துரைமுருகன்; பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்!
 


Thalapathy 69 First look, Jana Nayagan

இந்த நிலையில் தான் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரும் 2026 பொங்கல் அல்லது கோடை விடுமுறையை முன்னிட்டு ஜன நாயகம் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் எந்த குறையும் வந்து விட கூடாது என்பதற்காக ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எடுத்து வருகிறார்களாம்.

நல்ல விசயத்திற்கு அஜித் போன் நம்பர் கேட்டாங்க, நான் தான் கொடுத்தேன்: நடிகர் பார்த்திபன்!
 

Jana Nayagan Vijay's Thalapathy 69 Movie Title

இந்த நிலையில் தான் ஜன நாயகம் படம் குறித்து விஜய் போட்ட கண்டிஷன் குறித்து இயக்குநர் ஹெச் வினோத் கூறியது இப்போது வைரலாகி வருகிறது. இந்த படம் 200 சதவிகிதம் விஜய்க்கான படமாக இருக்கும். அனைத்து தரப்பு ஆடியன்ஷூம் பார்க்கும் வகையில் இந்த படம் இருக்கும். இந்த படம் தொடங்கிய போது இந்த படத்தை எல்லோருமே பார்ப்பார்கள், அரசியல் தலைவர்கள் கூட பார்ப்பார்கள். அதனால், யாரையும் தாக்காத வகையில் படம் இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டதாக அவர் கூறியிருக்கிறார்.

அதிக சம்பளம் கொடுத்து அஜித்தின் அடுத்த பட கால்ஷீட்டை வாங்கிய ரெட் ஜெயண்ட்ஸ்!
 

Latest Videos

click me!