ஆர்யா எங்கே... இரவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சாயிஷா..! எங்கு தெரியுமா..?

Published : Aug 13, 2022, 07:08 PM IST

நேற்று தன்னுடைய 25ஆவது பிறந்த நாளை நடிகையும், ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா கொண்டாடிய நிலையில், இவரது புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

PREV
17
ஆர்யா எங்கே... இரவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சாயிஷா..! எங்கு தெரியுமா..?

தமிழ் திரையுலகில், பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'வனமகன்' படத்தின் மூலம் அறிமுகமான சாயிஷா.  மிக குறுகிய நாட்களிலேயே, தன்னுடைய நடிப்பாலும், அழகாலும், மற்றும் நடன அசைவுகளாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.

27

'வனமகன்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'கடைக்குட்டிசிங்கம்', விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'ஜூங்கா', சூர்யாவுக்கு ஜோடியாக  'காப்பான்', என தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் செய்திகள்: இது எங்க போய் முடிய போகுதோ..? கேரவனுக்குள் மணக்கோலத்தில் கொஞ்சி குலாவும் அமீர் - பாவனி! பொங்கும் நெட்டிசன்கள்
 

37

இந்நிலையில், இவர் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து, 'கஜினிகாந்த்' படத்தில் நடித்த போது... ஆர்யா - சாயிஷா இடையே காதல் ஏற்பட்டது. தங்களுடைய காதல் குறித்து வெளியே சொல்லாமல் இருந்த ஆர்யா திடீர் என திருமண தேதியை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

47

இதை தொடர்ந்து இவர்களது திருமணம் கடந்த 2019 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக நடந்தது. இவர்களது திருமணத்தில் பல திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

மேலும் செய்திகள்: இது டாப்ஸிக்கு தெரியாம போச்சே..? மேடையில் தமன்னா செய்த செயல்... வைரலாகும் வீடியோ!
 

57

திருமணத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே சாயிஷா நடித்தார். பின்னர் திரையுலகின் பக்கம் தலை காட்டாமல் இருந்த நிலையில், இவர்களுக்கு குழந்தை பிறந்த தகவலை நடிகர் விஷால் வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களையும் கூறினார்.

67

சாயிஷா தற்போது தன்னுடைய குழந்தையை கவனிப்பதில் முழு கவனம் செலுத்தி வரும் நிலையில், அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் சாயிஷாவின் தன்னுடைய 25 ஆவது பிறந்தநாளை, நேற்று கொண்டாடியுள்ளார். காஷ்மீரில் இரவு நேரத்தில்... சாயிஷா கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த தமன்னா! போயும்... போயும்.. இப்படி ஒரு கதாபாத்திரமா? லேட்டஸ்ட் அப்டேட்!
 

77

கருப்பு நிற சல்வாரில், மிகவும் எளிமையாக இரவு நேரத்தில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவர் மட்டுமே தனியாக நின்று போஸ் கொடுத்துள்ளதை பார்த்து, ரசிகர்கள் ஆர்யா எங்கே என்கிற கேள்வியுடன், தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories