விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்திற்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த திட்டம் குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் தளபதி 67 இல் தான் விஜயுடன் லோகேஷ் கைகோர்க்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது.
25
lokesh kanagaraj
மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக அமைய உள்ளது. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிக்கானை லோகேஷ் கனகராஜ் இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகான் உடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாகவும், அவரது வரவிருக்கும் படத்தில் மன்சூருக்கு சிறப்பான வேடத்தை எழுதியுள்ளதாகவும் கூறியிருந்தார். மேலும் படத்திற்கான ஸ்கிரிப்ட் குறித்து மன்சூர் அலிகானை அணுகவோ அல்லது விவரிக்கவும் இல்லை என்றும் கூறியிருந்தார்.
நடிகர் விஜய் தற்போது தனது வரவிருக்கும் தமிழ், தெலுங்கு இரு மொழி படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தை வம்சி இயக்கி வருகிறார். வாரிசு என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ராஷ் மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த வருகின்றனர். வாரிசு இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே விஜயின் அடுத்த படம் பற்றி ஏற்கனவே நிறைய சலசலப்புகள் உள்ளன. இது தற்காலிகமாக தளபதி 67 என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறது. இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சூப்பர் ஸ்டாருடனான திட்டத்தையும் லோகேஷ் தன் கைவசம் வைத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.