நம் இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு அனைவரது வீட்டிலும் தேசிய கொடி என்கிற திட்டத்தை சமீபத்தில் பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இதை தொடர்ந்து நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில், தேசிய கொடி ஏற்றப்பட்ட நிலையில், இன்று... விஜய் வீட்டில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அதே போல்... சமூக வலைத்தளத்தில் உள்ள அனைவரும், வாட்ஸ்அப், ட்விட்டர், மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுடைய முகப்பு பக்கத்தில் தேசிய கொடியை ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் மற்றும், மக்கள் தேசிய கொடியை ப்ரொபைல் பிச்சராக வைத்து வருகிறார்கள்.