16 வயதினிலே துவங்கி இங்கிலீஷ் விங்கிலீஷ் வரை...மயிலின் சிறந்த திரைப்பயணம் இதோ!

Published : Aug 13, 2022, 03:30 PM ISTUpdated : Aug 13, 2022, 03:33 PM IST

இன்று பிறந்தநாள் காணும் மறைந்த ஸ்ரீதேவியின் திரைப்பயணத்திலிருந்து சூப்பர் ஹிட் அடித்த படங்கள் சிலவற்றை இங்கு காணலாம்..

PREV
111
16 வயதினிலே துவங்கி இங்கிலீஷ் விங்கிலீஷ் வரை...மயிலின் சிறந்த திரைப்பயணம் இதோ!
Image: Getty Images

பிரபல நடிகை ஸ்ரீதேவி ரசிகர்களை விட்டு பிரிந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. ஸ்ரீதேவியின் மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் சினிமா உலகிற்கும் பேரிழப்பாக உள்ளது. இதற்கிடையே இன்று ஸ்ரீதேவியின் பிறந்தநாளையொட்டி மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூரின் அம்மா குறித்தான உருக்கமான பதிவு இன்ஸ்டால் ஆறுதலை பெற்று வருகிறது.  

இன்று 59 ஆவது பிறந்தநாள் காணும் மறைந்த ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு குளியலறை தொட்டியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தற்போது இவர் பிறந்தநாளை ஒட்டி ஸ்ரீதேவியின் பிளாக்பஸ்டர் படங்கள் குறித்தும் அவரது பாடல்கள் குறித்த செய்திகளும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஸ்ரீதேவியின் திரைப்பயணத்திலிருந்து சூப்பர் ஹிட் அடித்த படங்கள் சிலவற்றை இங்கு காணலாம்..

211
sridevi hit movie

16 வயதினிலே :

ஸ்ரீதேவி திரையுலகில் நாயகியாக என்ட்ரி கொடுத்த இரண்டாவது படம் 16 வயதினிலே. இந்த படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். கமலஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இதற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.  இந்த படம் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. விமர்சன ரீதியிலும் வரவேற்பை பெற்றது. இளமை கொஞ்சும் தேவதையாக அன்றைய ரசிகர்களின் மனதில்  நீங்கா இடம் பிடித்து விட்டார் ஸ்ரீதேவி.  அதோடு இந்த படம் தான் ரஜினியின் முதல் கலர் படமாகும். படம் முழுவதும் கிராமப்புறத்தில் படமாக்கப்பட்டு தமிழ் சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்தை படைத்து விட்டது 16 வயதினிலே.

311
sridevi hit movie

மூன்றாம் பிறை :

மறதி நோயால் பாதிக்கப்பட்டவராக ஸ்ரீதேவி  நடித்த  இந்த படம் டீன் ஏஜ் இளசுகளின் மனதில் வேரூன்றி நின்றது. அந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடல்களும் இன்று வரை பிரபலம். இந்தப் படத்தை பாலு மகேந்திரா இயக்கி இருந்தார். இதற்கும் இளையராஜா இசை தான். கண்ணதாசன் பாடல் வரிகளில்  எஸ்பிபி குரலில் வெளியான பாடல்கள் அன்றைய வெற்றி வரிசையில் முன்னணியில் உள்ளன.

மேலும் செய்திகளுக்கு... அம்மாவை நினைத்து ஏங்கும் ஜான்விகபூர்...ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் மகள்களின் உருக்கமான பதிவு

411
sridevi hit movie

மீண்டும் கோகிலா :

மீண்டும் கமலுடன் மீண்டும் கோகிலா படத்தில் தோன்றினார் ஸ்ரீதேவி. ரங்கராஜன் என்பவர் இயக்கிய இந்த படத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

511
sridevi hit movie

மூன்று முடிச்சு :

ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீதேவி என மூவரும் பதினாறு வயதினிலே படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்த படம் இதில் ரஜினிகாந்த் எதிர் நாயகனாக நடித்திருப்பார். முன்னதாக கமலஹாசனும் ரஜினிகாந்த்தும்  ஒரே அறையை பகிர்ந்து கொண்ட நண்பர்களாக இருக்கையில், ஸ்ரீதேவியின் வருகையால் இவர்களுக்குள் பிரிவு ஏற்படுகிறது. இறுதியில் கமலை கொள்ளும் மனநிலைக்கு வருகிறார் ரஜினிகாந்த் இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் செய்திகளுக்கு...hansika Motwani : கிளாமர் உடையில் பர்த்டே பேபி..ஹன்ஷிகாவின் பார்டி மோட் !

611
sridevi hit movie

காயத்திரி :

ரஜினிக்கு ஜோடியாக இவர் காயத்திரி எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பட்டாபிராம் என்பவர் இயக்கியிருந்தார். இதில் ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

711
sridevi hit movie

கல்யாண பரிசு :

பின்னர் கல்யாண பரிசு படத்தில் தோன்றியிருந்தார் ஸ்ரீதேவி. ஸ்ரீதர் சி வி  இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பி சரோஜாதேவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அஇதில் சப்போர்டிங் நாயகியாக வந்த இவரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றிருந்தது.

811
sridevi hit movie

சிகப்பு ரோஜாக்கள் :

இன்றளவும் பிரபலமான படம்தான் சிகப்பு ரோஜாக்கள். காதல் என்னும் பெயரில் பெண்களை கொலை செய்து  மர்ம பங்களாவின் சுவற்றுக்குள் ஒளித்து வைக்கும் நாயகன் கதைக்களத்தோடு அன்றைய த்ரில்லராக வந்து மிரட்டி இருந்தது இந்த படம். பாரதிராஜா இயக்கத்தில் ஒரு மயில்கல்லாக வெளியான இந்த படத்திற்கும் இளையராஜா தான் இசையமைத்திருந்தார். இதில் ஸ்ரீதேவியின் நடிப்பு வரவேற்பை பெற்றது.

மேலும் செய்திகளுக்கு...விதவிதமான கிளாமர் லுக்கில் திரைப்பட விழாவிற்கு வருகை தந்த பிரபல நடிகைகள்

911
sridevi hit movie

வறுமையின் நிறம் சிவப்பு :

மீண்டும் கமலுடன் நாயகியாக நடித்த ஸ்ரீதேவிக்கு  வறுமையின் நிறம் சிகப்பு ஒரு புதிய திருப்பு முனையை உருவாக்கி இருந்தது. வேலை இல்லாத பட்டதாரி இளைஞனின் கதை அம்சம் பலரது பாராட்டுகளை பெற்றது. இந்த இளைஞனுக்கு ஆதரவாக இருக்கும் ஸ்ரீதேவியின் நடிப்பு  மிகச் சிறப்பாகவே அமைந்திருந்தது. வறுமையின் நிறம் சிகப்பு படத்தை பாலச்சந்தர் இயக்கியிருந்தார். எம் எஸ் விஸ்வநாதன் இசையில் எஸ்பிபி பாலசுப்ரமணியம், ஜானகி குரல்களில் வெளியான ஒவ்வொரு பாடல்களும் அற்புதத்தை உருவாக்கியது.
 

1011
sridevi hit movie

ஜானி :

ரஜினிக்கு ஜோடியாக ஜானி படத்தில் தோன்றினார் ஸ்ரீதேவி. ரஜினி இரண்டு வேடங்களில் நடித்த இதில் தனது காதலன் குற்றவாளி இல்லை என நம்பும் பாடகி தனது பாடல்கள் மூலம் தனது காதலனை தேடும் அழகான தருணங்களை வாழ்ந்து காட்டியிருப்பார் ஸ்ரீதேவி.

1111
sridevi hit movie

இங்கிலீஷ் விங்கிலீஷ் : 

இறுதியாக 2012 ஆம் ஆண்டு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் நடித்திருந்தார்  ஸ்ரீதேவி. குடும்பத் தலைவியான இவர் தனது நிலையை உயர்த்துவதற்காக ஆங்கிலம் கற்றுக் கொள்கிறார். அப்போது இவர் சந்திக்கும் இன்னல்கள் மற்றும் இவரின் தைரியம் உள்ளிட்டவை  அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் அஜித் குமார் தோன்றியிருந்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories