இசையமைப்பாளர் அனிருத் கடந்த 2012-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 படம் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இதையடுத்து அவர் இசையமைத்த படங்களெல்லாம் அடுத்தடுத்து ஹிட்டாகின. இதனால் தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டார் அனிருத்.
தனுஷ் அனிருத் காம்போவில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் உருவாகி உள்ள படம் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கான இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தனுஷ், அனிருத், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராஷி கண்ணா உள்பட படக்குழுவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.