தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி என்றாலே படம் ஹிட் என சொல்லும் அளவுக்கு, இதுவரை அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட வெற்றியை ருசித்துள்ளன. இதுவரை அவர்கள் இருவரும் படிக்காதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.
வட சென்னை படத்தின் முதல் பாகத்தை படமாக்கும் போதே அதன் இரண்டாம் பாகத்துக்கான சில காட்சிகளையும் இயக்குனர் வெற்றிமாறன் படமாக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதுவரை இரண்டாம் பாகத்திற்கான 50 நிமிட காட்சிகளை ஏற்கனவே அவர் படமாக்கி விட்டாராம். எஞ்சியுள்ள காட்சிகளை குறுகிய காலத்தில் படமாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வெற்றிமாறன் வட சென்னை படத்தின் 2-ம் பாகத்திற்கான ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதன்படி விடுதலை மற்றும் சூர்யாவின் வாடிவாசல் ஆகிய படங்களின் ஷூட்டிங்கை முடித்த பின் வட சென்னை படத்தை தொடங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்.... கார்த்தியின் விருமன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய சூர்யா.. எப்ப ரிலீஸ் தெரியுமா?