
பிரபல தெலுங்கு பட நடிகை அனசூயா பரத்வாஜின் திரைப்பட வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது கடந்த வாரம் புஷ்பா 2 திரைப்படம், வசூலில் சக்க போடு போட்டு வருகிறது. புஷ்பா 1 திரைப்படத்தில், தனலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அதிகம் கவனம் பெற்ற இவர், இரண்டாவது பாகத்திலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் மிரட்டி உள்ளார்.
அனசூயா நடிகையாக மட்டும் இன்றி ஒரு தொகுப்பாளராகவும் மிகவும் பிரபலமானவர். 2013 ஆம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க துவங்கினார். இந்த காமெடி நிகழ்ச்சி இவருக்கு குறுகிய காலத்திலேயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
எதிர்பார்ப்பை எகிற வைத்த சன் டிவி! புதிய ஹீரோயினோடு களமிறங்கும் 'எதிர்நீச்சல் 2' சீரியல்!
அதே சமயம் இவர் அணிந்து வரும் ஆடைகள் அதிக அளவிலான விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், அதனை அனசூயா ஒருபோதும் பொருட்படுத்தவில்லை. மேலும், எனக்குப் பிடித்த உடைகளை நான் அணிவேன். எனக்கு வசதியாக இருந்தால் எந்த உடையையும் அணிவேன். என தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். சின்னத்திரை நிகழச்சியில் அறிமுகமாகும் முன்பே... வெள்ளித்திரை படங்களில் அனசூயா நடித்திருந்தாலும், தொகுப்பாளராக மாறியபின்னரே இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய துவங்கியது.
கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் ஜபர்தஸ்த் நிகழ்ச்சியை அனசூயா தொகுத்து வழங்கி வந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு திரைப்படங்களில் பிஸியானதால் சின்னத்திரையில் இருந்து விலகினார். புஷ்பா படத்தை தொடர்ந்து சில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் அனசூயா. அந்த வகையில் தற்போது இவரின் கைவசம், ஃபிளாஷ் பேக் மற்றும் வுல்ப் ஆகிய படங்கள் உள்ளது.
என்னுடைய இந்த நிலைக்கு காரணம் அவங்க 2 பேர் தான்! நன்றி மறவாத அட்லீ எமோஷனல் பேச்சு!
அனசூயா தெலுங்கு திரையுலகில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாகவே பார்க்கப்படுகிறார். இருக்கும் விஜய் தேவரகொண்டா சரிகர்களுக்கும் இடையே நடந்த பிரச்சனை மிகவும் பிரபலம்.
41 வயதாகும் அனசூயாவுக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில்... மூன்றாவது குழந்தை மீதான ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
2024 - சூர்யா முதல் அட்டகத்தி தினேஷ் வரை; நடிப்பில் அசர வைத்த டாப் 10 ஹீரோக்கள்!
இதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். அனசுயாவுக்கு ஆண் குழந்தையை விட பெண் குழந்தைகள் தான் மிகவும் பிடிக்குமாம். முதல் குழந்தையே தனக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என நினைத்தார். ஆனால் ஆண் குழந்தை பிறந்தது. இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் போதும் பெண் குழந்தைக்கு ஆசைப்பட்ட அனசூயாவுக்கு, ஆண் குழந்தை பிறந்ததால் ஏமாற்றமே மிஞ்சியது.
பெண் குழந்தை மீதான ஆசை காரணமாகவே, மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். பல நடிகைகள், குழந்தை பெற்று கொள்ளாமல்... வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையில், அனசூயா 41 வயதிலும் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சிவகார்திகேயனுக்காக ரூல்ஸை மாற்றிய பிக்பாஸ்! சர்ச்சையில் சிக்க வைத்த செம்ம சம்பவம்!