சன் டிவியில் கடந்த 2022-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட 'எதிர்நீச்சல்' தொடர் இரண்டு வருடமாக TRP-யில் மாஸ் காட்டிய நிலையில், அதிரடியாக இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக இந்த தொடரை இயக்கி வந்த திருச்செல்வம் கூறினார். இவரின் இந்த முடிவு, எதிர்நீச்சல் தொடரின் ரசிகர்களை மட்டும் அல்ல, சீரியலில் நடிப்பவர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
24
Ethirneechal ending Reason
இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான, பல காரணங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில், பின்னர் இயக்குனர் திருச்செல்வம் இதற்கான விளக்கத்தை கொடுத்தார். அதாவது எதிர்நீச்சல் சீரியல் TRP ரேட்டிங்கில் சிறு தடுமாற்றத்தை கண்டபோது, அந்த தொடரை வேறு ஒரு பிரைம் டைமுக்கு மாற்ற கூறி சன் டிவி தரப்பு வேண்டுகோள் வைத்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த திருச்செல்லாம் இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, இரண்டாவது சீசன் இயக்க போவதாக கூறியுள்ளார். இதற்க்கு சன் டிவி தரப்பும் ஒப்புதல் வழங்கிய பின்னரே இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறினார்.
தற்போது இயக்குனர் திருச்செல்லாம் இயக்கியுள்ள 'எதிர்நீச்சல் 2' சீரியலில் முதல் பாகத்தில் நடித்த பிரபலங்கள் தான் நடித்துள்ளனர். ஆனால் ஹீரோயினாக நடித்து வந்த மதுமிதா இந்த சீரியலில் இருந்து சில காரணங்களால் விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து, அவருக்கு பதிலாக ஜீ தமிழில், 'புது புது அர்த்தங்கள்' சீரியலில் நடித்த, பார்வதி நாயகியாக நடித்துள்ளார். மேலும் தாரா கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமும் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
44
Ethirneechal 2 Promo
எதிர்நீச்சல் முதல் பாகம் நிறைவடைந்த பின்னர் 2-ஆம் பாகம் குறித்து, எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது 'எதிர்நீச்சல் 2' சீரியலின் இரண்டாம் பாகம் குறித்த புரோமோ சன் டிவியில் வெளியாகி, இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது குறிபிடித்தக்கது.