Rajamouli, Allu Arjun, Sukumar
பான் இந்தியா படங்கள்
பான் இந்தியா படங்கள் என்கிற டிரெண்டை உருவாக்கிய பெருமை இயக்குனர் ராஜமவுலியையே சேரும். அவரின் பாகுபலி படம் தான் பான் இந்தியா படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது. பாகுபலி படத்தின் பான் இந்தியா வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகம் உலகளவில் சக்கைப்போடு போட்டது. இந்த இரண்டு படங்கள் கொடுத்த தெம்பு தான் இன்று பான் இந்தியா படங்கள் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக தெலுங்கு திரையுலகம் அதிகளவில் பான் இந்தியா படங்களை எடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறது.
Pushpa 2 Sukumar, allu arjun
புஷ்பாவும் ராஜமவுலியும்
அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ள படம் தான் புஷ்பா 2. இப்படத்தின் மூலம் பான் இந்தியா படங்களின் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை தகர்த்து வருகிறார் அல்லு அர்ஜுன். இதுவரை எந்த ஒரு இந்திய படமும் நிகழ்த்திடாத சாதனையை புஷ்பா 2 நிகழ்த்தி இருக்கிறது. முதல்நாளே இப்படம் ரூ.294 கோடி வசூலித்திருக்கிறது. இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. ஆனால் புஷ்பா படத்தை பான் இந்தியா படமாக வெளியிடும் மனநிலையில் படக்குழு இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா... ஆனால் அது தான் உண்மை.
இதையும் படியுங்கள்... புஷ்பா 2 புயலில் சிக்கி சின்னாபின்னமான பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்ஸ்!
Pushpa 2 Pan India Success
மாஸ்டர் மைண்ட் ராஜமவுலி
புஷ்பா படத்தின் முதல் பாகத்தை பான் இந்தியா படமாக வெளியிடும் ஐடியாவே இல்லையாம். ஆனால் இயக்குனர் ராஜமவுலி தான் படத்தை பார்த்துவிட்டு இது பான் இந்தியா அளவில் கொண்டாடப்படும் தைரியமாக வெளியிடுங்கள் என உத்வேகம் அளித்தாராம். அவர் சொன்னபடியே புஷ்பா படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அதுமட்டுமின்றி இந்த வெற்றி தான் தன்னை அடுத்த பாகம் எடுக்க தூண்டியதாகவும் இயக்குனர் சுகுமார் கூறி இருக்கிறார்.
Pushpa 2 Director Sukumar
இயக்குனர் சுகுமார் சொன்ன சீக்ரெட்
அண்மையில் நடைபெற்ற புஷ்பா 2 படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்துகொண்ட இயக்குனர் சுகுமார், தான் இந்த மேடையில் நிற்பதற்கு முக்கிய காரணமே ராஜமவுலி தான், அவர் இல்லாவிட்டால் புஷ்பா பான் இந்தியா படமாக வந்திருக்காது. அவரின் வழிகாட்டுதலால் தான் இது சாத்தியமானது என உருக்கமாக பேசியதோடு அவருக்கு நன்றியும் தெரிவித்தார். தான் சாதித்ததோடு மட்டுமின்றி தன்னைப்போல் பிறரும் சாதிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ராஜமவுலி செய்த இந்த செயல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... புஷ்பா 2-வை புரட்டி எடுக்க; இந்த வாரம் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறதா?