Published : Dec 10, 2024, 01:12 PM ISTUpdated : Dec 10, 2024, 02:09 PM IST
இயக்குனர் அட்லி நேற்று நடந்த 'பேபி ஜான்' பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில், தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணம், 2 பேர் தான் என தளபதி விஜய் மற்றும் ஷாருக்கானுக்கு உருக்கமாக நன்றி கூறினார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும், அனைவருமே ஜெயிப்பது இல்லை. பலர் ஒரே படங்களிலேயே திரை உலகை விட்டு காணாமல் போனதும் உண்டு. ஆனால் சமீப காலமாக இளம் இயக்குனர்கள், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்று வருகிறார்கள். அப்படிப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் தான் அட்லீ.
26
Atlee Start the Cinema Carrier in Assistant Director
தன்னுடைய 25 வயதில், இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனராக கேரியரை துவங்கிய அட்லீ, எந்திரன், நண்பன், போன்ற படங்களில் பணியாற்றினார். இந்த அனுபவத்தை கொண்டு சில குறும்படங்களை இயக்கிய அட்லீ, 2013 ஆம் ஆண்டு நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா, போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் தயாரித்திருந்தார். இப்படம் மௌன ராகம் படத்தின் நவ நாகரீக ரிமேக் போல் இருப்பதாக பல விமர்சனங்கள் எழுந்த போதிலும், அந்த விமர்சனங்களை தகர்த்தெறிந்து ரூபாய் 50 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை அள்ளியது.
இந்த படத்திற்கு பின்னர் தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில், என மூன்று படங்களை அடுத்தடுத்து இயக்கி ஹார்டிக் வெற்றியை பதிவு செய்தார் அட்லீ. பின்னர் அதிரடியாக பாலிவுட் திரையுலகில் படம் இயக்க சென்றார். ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய 'ஜவான்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.1200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது.
46
Atlee And Allu Arjun Movie
தன்னுடைய அடுத்த படத்தை, புஷ்பா 2 பட நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ப்ரீ புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில்... விரைவில் ஷூட்டிங் துவங்க உள்ளது.
தமிழில் சில படங்களை தயாரித்துள்ள அட்லீ, தளபதி விஜய் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான தெறி திரைப்படத்தை ஹிந்தியில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்க சமந்தா ஏற்று நடித்த வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.
66
Atlee Emotional Speech
அப்போது நன்றி மறவாமல் தன்னுடைய இந்த நிலைக்கு காரணமான இருவரை நினைத்து பார்த்து நன்றி கூறினார் இயக்குனர் அட்லீ. இந்த விழாவில் பேசிய இயக்குனர் அட்லீ... "என்னுடைய முதல் நன்றி ஷாருக்கான் சார் அவர்களுக்கு. அவர் இல்லாமல் நான் பாலிவுட்டில் படம் பண்ணியிருக்க முடியாது. இப்போது நான் பாலிவுட்டில் படம் தயாரித்துள்ளேன். நீங்கள் எங்கிருந்தாலும் என்னை ஆசீர்வதிப்பீர்கள் என நம்புகிறேன் சார். இதைத் தொடர்ந்து என்னுடைய இரண்டாவது நன்றி தளபதி விஜய் அவர்களுக்கு. அவர் என்னுடைய அண்ணன், அவர் என் இதயம், அவர் என் உயிர், அவர்தான் எனக்கு எல்லாமே... நான் இப்போது இந்த நிலைமையில் இருப்பதற்கு முக்கிய காரணமே அவர்தான் என நன்றி மறவாமல் பேசியுள்ளார்.