கண்களை பெரிதாக்கி..குளியல் பாவாடை போன்ற உடையணிந்து மயக்கும் அமலா பால்

Published : Aug 27, 2022, 09:14 PM ISTUpdated : Aug 27, 2022, 09:15 PM IST

கண் முழுதும் மாய் பூசி குளியலுக்கு கட்டும் பாவாடை போன்ற உடை அணிந்து கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

PREV
15
கண்களை பெரிதாக்கி..குளியல் பாவாடை போன்ற உடையணிந்து மயக்கும் அமலா பால்
AmalaPaul

மலையாள பைங்கிளியான அமலாபால் கடந்த 2010 ஆம் ஆண்டு மைனா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்தார். பிரபு சாலமன் இயக்கிய இந்த படத்தில் மலைவாழ் கிராமத்தில் வாழும் அழகிய பெண்ணாக இவர் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். ஆனால் இறுதியில் காதலுக்காக காத்திருக்கும் இளம் பெண்ணின் கொடூரமான முடிவு பார்ப்பவர்களை பதற வைக்கும் விதத்தில் அமைந்திருந்தது.

25
AmalaPaul

இந்தப் படம் ஒரு சிறந்த ஓப்பனிங் இருந்ததோடு முன்னணி நாயகியாக இவரை அடையாளப்படுத்தியது.  அதிக வாய்ப்புகளைப் பெற்றதோடு பல விருதுகளையும் குவித்தார் அமலா பால். தெய்வத்திருமகள், தலைவா  படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

மேலும் செய்திகளுக்கு...தனுஷின் திருச்சிற்றம்பலம் திரையிடப்பட்ட தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்..

35
AmalaPaul

தெய்வத்திருமகள் படத்தில் படப்பிடிப்பின் போது ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தார் சம்மதத்துடன் கரம்பிடித்த இவர்கள் வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே திருமண பந்தத்தில் நீடித்திருந்தனர். பின்  2017 ஆம் ஆண்டு மனமுவந்து பிரிவதாக இருவரும் அறிவித்து அவரவர் பாதையில் சென்றுவிட்டனர்.

மேலும் செய்திகளுக்கு...ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் இந்தியன் போட்டோ சூட்... உடல் முழுவதும் தோட்டாக்களுடன் மிரட்டும் கமல்

45
AmalaPaul

தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய் மறுமணம் முடித்து விட்டார். ஆனால் அமலாபாலோ தன் பாதையை வேறு வகையாக மாற்றி அதிக கவர்ச்சி நாயகிகளில் ஒருவர் ஆகிவிட்டார். அதன்படி 2019 ஆம் ஆண்டு இவர் நடித்த ஆடை படம் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருந்தது. நிர்வாணமாக இவர் நடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...தம்பிக்கு வில்லனாகும் செல்வராகவன்? நானே வருவேன் படத்தின் புதிய அப்டேட் இதோ!

55
AmalaPaul

முன்னதாக படங்களில் கமிட்டாகாமல் இருந்த அமலாபால் உல்லாச சுற்றுலாக்கள் சென்று அங்கங்கு எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். தற்போது மலையாளத்தில் ஒரு படத்திலும் தமிழில் கடாவரம் படத்திலும் நடித்து முடித்துள்ளார் அமலா பால்.

இந்நிலையில் தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றிக் கொண்ட இவர் மன உறுதி அதிகரித்த பெண்ணாக வலம் வருகிறார்.அதோடு போல்ட் போஸ்களை அவ்வப்போது தட்டி விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது கண் முழுதும் மாய் பூசி குளியலுக்கு கட்டும் பாவாடை போன்ற உடை அணிந்து கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories