Published : Aug 27, 2022, 06:43 PM ISTUpdated : Aug 27, 2022, 06:45 PM IST
சமீபத்தில் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்ட ஆலியா பட், திருமணம் ஒரு சில மாதங்களிலேயே கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்தார். தற்போது இவர் பேபி பம்ப் தெரியும் படி ட்ரான்ஸ்பரென்ட் உடையில், கணவர் ரன்பீருடன் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இரு வீடு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
27
இவர்களது திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், பாலிவுட் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.
திருமணத்துக்கு பின்னர், தன்னை தேடி வந்த பட வாய்ப்புகளை கூட ஏற்காமல், இருந்த ஆலியா பட் திடீர் என தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.
47
மருத்துவமனையில் செக் அப்புக்கு சென்றபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, “தங்களுக்கு குழந்தை பிறக்க போகிறது” என குறிப்பிட்டு இரண்டு சிங்கங்கள் அதன் குட்டியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தையும் ஷேர் செய்தார். இந்த செய்தியை கேட்டு உச்சாகமான ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
கர்ப்பமாக இருப்பதால் அதிகம் வெளியில் வராமல் இருந்த ஆலியா பட், தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர், கணவருடன் சேர்ந்து போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
67
இந்த புகைப்படத்தில் ஆலியா பட்டின் மகப்பேறு காலத்தில் அணிவதற்கு ஏதுவான, மிகவும் லூசான... பிங்க் நிற சிஃப்பான் துணியால் வடிவமைக்கப்பட்ட டாப் மற்றும் கருப்பு நிற பேன்ட் ஒன்றியும் அணிந்துள்ளார்.
மிகவும் ட்ரான்ஸ்பரெண்டாக உள்ள இந்த உடையில் அவரது பேபி பம்ப் தெரியும்படி உள்ளது. மேலும் கர்ப்பமாக இருப்பதால், முன்பை விட எடை கூடி காணப்படுகிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.