Catherine Tresa Latest Photos: கடற்கரையை சூடேற்றும் படு மோசமான உடையில்... ஜோராக போஸ் கொடுக்கு கேத்தரின் தெரசா!

First Published Dec 20, 2021, 10:39 AM IST

விதவிதமான கவர்ச்சி உடையில் புகைப்படம் வெளியிட்டு வரும் நடிகை கேத்தரின் தெரசா (Catherine Tresa) தற்போது இளம் ரசிகர்களை சூடேற்றும் விதமாக, கடற்கரையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வேற லெவலுக்கு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இயக்குனர் பா.ரஞ்சித், 'அட்டகத்தி' படத்தை தொடர்ந்து இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படமான 'மெட்ராஸ்'படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் கேத்தரின் தெரசா.

இந்த படத்தை தொடர்ந்து 'கதகளி', 'கடம்பன்', 'கலகலப்பு 2 ', 'கதாநாயகன்' என இவருக்கு திரைப்படங்கள் வரிசை கட்டியது.

ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாமல் நடித்தாலும், பின்னர் அளவுக்கு மீறிய கவர்ச்சியை அள்ளிதெறித்து படங்களில் நடிக்க துவங்கினார்.

இவர் காட்டி வரும் ஹாட் கவர்ச்சிக்கு தமிழ் பட வாய்ப்புகள் குவிகிறதோ இல்லையே... தெலுங்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கிறது.

அந்த வகையில் தமிழில், இவர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு 'அருவம்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தோல்வியை தழுவியதால் தமிழ் பட வாய்ப்புகளே இல்லாமல் போனது.

தெலுங்கில் கை வசம் மூன்று படங்கள் உள்ள நிலையில், பட வாய்ப்பை பிடிக்க விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் தன்னுடைய ஓய்வு நாட்களை கழிப்பதற்கு வெகேஷன் சென்றுள்ள கேத்தரின் தெரசா அங்கு எடுத்த பீச் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இளம் நெஞ்சங்களை பொங்க வைத்துள்ளார். இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.

click me!