ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த, தமிழகத்தைச் சேர்ந்த நடிகை விமலா ராமன் 2004 ஆம் ஆண்டு 'மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா' பட்டத்தை கைப்பற்றியவர். பின்னர் மாடலிங் கவனம் செலுத்தி வந்த இவர், திரைப்பட வாய்ப்புகளையும் தேட துவங்கினார்.
இவர் தமிழில் 'பொய்' படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிறந்த அறிமுகத்தை கொடுத்தது என்றால் அது இயக்குனர் சேரன் நடித்து வெளியான ராமன் தேடிய சீதை திரைப்படம் தான்.
தற்போது தன்னுடைய பிறந்தநாளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடியதாக தெரிவித்துள்ளார். விமலா ராமனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவருடைய தாய் தந்தை மற்றும் வினய் ஆகியோர் உள்ளனர். எனவே மறைமுகமாக வினையை காதலிப்பதை விமலா ராமன் கூறியுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.