நடிகை சினேகா இன்று தன்னுடைய மகள் ஆத்யாந்தா மூன்றாவது பிறந்தநாள் கொண்டாடுவதை முன்னிட்டு அவரது கியூட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து தமிழில் அறிமுகமான சிநேகாவிற்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.
இவர் நடிப்பில் வெளியான ஆட்டோகிராப், புதுப்பேட்டை, பள்ளிக்கூடம், போன்ற திரைப்படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்படும் படங்களாக உள்ளன.
பல இளம் நட்சத்திர ஜோடிகளுக்கு, எடுத்துக்காட்டாக மிகவும் ஒற்றுமையான நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்து வரும் சினேகா - பிரசன்னா ஜோடிக்கு, தங்களின் காதலின் அடையாளமாக விகான் என்கிற மகனும் ஆத்யாந்தா என்கிற மகள் ஒருவரும் உள்ளனர்.
மகளின் பிறந்தநாளை முன்னிட்டு மகளின் க்யூட் புகைப்படங்கள் சிலவற்றை, சமூக வலைதளத்தில் இவர் வெளியிட அந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சினேகாவின் புகைப்படங்கள் மற்றும் பதிவு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. தற்போது மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் நன்கு வளர்ந்து விட்டதால் அடுத்தடுத்து சினேகா சிலபடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது.