
ரம்யா பாண்டியன் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது அவருடைய அதகள போட்டோ ஷூட் புகைப்படங்கள் தான். அந்த அளவுக்கு அவர் எடுத்து கொண்ட மொட்டை மாடி போட்டோ ஷூட் மிகவும் பிரபலம்.
பெரிதாக எந்த ஒரு மேக் அப்பும் இல்லாமல்... எளிமையான பூனம் சேலையில், காதில் ஒரு ஜிமிக்கி, ஃப்ரீ ஹேர் விட்டு, நெற்றியில் பொட்டு மட்டும் வைத்து கொண்டு இந்த புகைப்படங்களில் இருந்தார்.
நெப்போலியன் மகன் தனுஷுக்கு மனைவி அக்ஷயா கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு! என்ன தெரியுமா?
இவர் எடுத்த இந்த மொட்டை மாடி போட்டோ ஷூட் பட்டி தொட்டி எங்கும் வைரலாக காரணம், இடையழகை காட்டியதில் இவர் வெளிப்படுத்திய தாராளம் தான்.
இந்த போட்டோ ஷூட் வைரல் ஆனாலும், ரம்யாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பட வாய்ப்புக்காக பொறுத்திருந்து போதும் என முடிவு செய்து, அதிரடியாக விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கினார்.
பாடகி மட்டுமில்ல நடிகையாகவும் ஒரே ஒரு படத்தில் நடித்த பி.சுசீலா! பலரும் அறிந்திடாத தகவல்கள்!
இந்த நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில், ரம்யா பாண்டியனுக்கு தனி ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்தியது. 'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சியில் தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி ஃபைனல் வரை வந்தாலும், டைட்டிலை தவற விட்டார்.
இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு... ஆரம்பத்தில் இருந்தே மிகவும் திறமையாக விளையாடிய ரம்யா பாண்டியன், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த ஆரியை தொடர்ந்து எதிர்த்து வந்ததால், வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலை உருவானது. எனவே மூன்றாவது ரன்னரப்பாக வெளியேறினார்.
விவாகரத்தான நடிகரை ரூ.3310 கோடி சொத்துக்காக வளைத்து போட்டாரா? யார் இந்த தமிழ் பட ஹீரோயின்?
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். அந்த வகையில் இவர் நடித்த, ராமே ஆண்டாளும் ராவண ஆண்டாளும் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.
அதிரடியாக மலையாள திரைப்படமான 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்த போதும் இப்படம் படு தோல்வியை சந்தித்தது.
ஜான்வி கபூர் அந்த இடத்தை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்தாரா? தீயாய் பரவும் புகைப்படம்!
இவரின் கைவசம் தற்போது இடுப்பன்காரி என்கிற படம் மட்டுமே உள்ளது. சரியான பட வாய்ப்புகள் இல்லாததால், தன்னுடைய குடும்பத்துடன் அடிக்கடி ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
அப்படி ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்ற போது, ரிஷிகேஷில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் யோகா பயிற்சி பெற்று வந்தார். அப்போது ரம்யா பாண்டியனுக்கு யோகா ஆசிரியராக இருந்தவர் தான் லோவன் தவான். ஆரம்பத்தில் நட்பில் துவங்கிய இவர்களின் பழக்கம் பின்னர் காதலாக மாறி, திருமணத்தில் கனிந்தது.
இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், அவ்வப்போது ரம்யா பாண்டியன் தன்னுடைய காதல் கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது ரம்யா பாண்டியன் ஹல்தி கொண்டாட்டத்தின் போது எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மஞ்சள் நிற உடையில்.... பேரழகில் இருக்கும் இவருடைய போட்டோஸ் படு வைரலாகி வருகிறது.
சூர்யாவை காப்பாற்றுமா 'கங்குவா'? ரிலீசுக்கு முன் வந்த பர்ஸ்ட் ரிவ்யூ இதோ!