பிளாப் ஆன ப்ளெடி பெக்கர்; முதல் படமே தோல்வியடைந்ததால் நெல்சன் எடுத்த அதிரடி முடிவு!

First Published | Nov 13, 2024, 2:39 PM IST

கவின் நடித்த ப்ளடி பெக்கர் திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் திலீப்குமார் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Bloody beggar Movie Producer Nelson

விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை டைரக்ட் செய்து வந்தவர் நெல்சன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மாஸான வெற்றியை ருசித்ததால் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்த நெல்சன் அவரை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். இப்படம் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

Bloody Beggar Movie

டாக்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை எடுத்தார் நெல்சன். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 2022ம் ஆண்டு கேஜிஎப் 2 படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன இப்படம் தோல்வியை தழுவியது. பீஸ்ட் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ரஜினி படத்தை இயக்க கமிட் ஆகிவிட்டார் நெல்சன். பீஸ்ட் படத்தின் தோல்வியால் நெல்சன் இயக்கத்தில் நடிக்க வேண்டாம் என பலர் அறிவுறுத்தியும், நெல்சன் மீது நம்பிக்கை வைத்த ரஜினி அவர் இயக்கத்தில் நடித்தார்.

Latest Videos


Bloody Beggar Kavin

பீஸ்ட் பட தோல்விக்கு பின் கடுமையான விமர்சனங்களை சந்தித்த நெல்சன், ஜெயிலர் படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார். தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கெல்லாம் ஜெயிலர் பட வெற்றி மூலம் பதிலடி கொடுத்தார் நெல்சன். ஜெயிலர் படம் ஹிட் ஆனதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணியில் இறங்கிய நெல்சன், தனியாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி, அதன்மூலம் படங்களை தயாரித்து வந்தார்.

இதையும் படியுங்கள்... நெல்சனின் கஜானாவை காலி செய்தாரா கவின்? ப்ளடி பெக்கர் வசூல் நிலவரம் இதோ

Nelson, Kavin

அவர் தயாரிப்பில் உருவான முதல் படம் ப்ளடி பெக்கர். இப்படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் இயக்கி இருந்தார். இப்படத்தில் கவின் நாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் கவின் பிச்சைக்காரனாக நடித்திருந்ததால் ரிலீசுக்கு முன் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் இப்படத்தை தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி படுதோல்வியை சந்தித்தது.

Nelson compensated the loss of Bloody Beggar Movie

ப்ளடி பெக்கர் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். இதனால் அதிரடி முடிவெடுத்த நெல்சன், விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கி இருக்கிறார். இப்படம் திரையரங்குகளில் தோல்வியை தழுவினாலும் அப்படத்தை தயாரித்த நெல்சனுக்கு லாபகரமான படமாக அமைந்ததாகவே கூறப்படுகிறது. இப்படத்திற்காக போட்ட காசை அதன் ஓடிடி மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் மூலம் நெல்சனுக்கு கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. தான் நஷ்டமின்றி தப்பியது மட்டுமின்றி தன் படத்தை நம்பி வெளியிட்ட விநியோகஸ்தர்களும் நஷ்டமடையக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு நெல்சன் அவர்களுக்கு உதவி இருப்பது பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... அமரன் முதல் லக்கி பாஸ்கர் வரை; தீபாவளி ரிலீஸ் படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்?

click me!