தமிழ் திரையுலகில் கோலோச்சிய பாடகிகள் வெகு சிலரே, அதிலும் முதல் முறையாக சிறந்த பாடகிக்கான தேசிய விருது வென்ற பாடகி பி சுசீலாவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இனிமையான குரலால் பல ஆயிரம் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ள பாடகி பி.சுசீலா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இளையராஜா இசையில் பி சுசீலா அதிகளவில் பாடல்கள் பாடாதது ஏன் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
Singer P Susheela
இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக ஆகும் முன்னர் சில இசையமைப்பாளர்களிடம் கிட்டாரிஸ்டாக பணியாற்றி இருக்கிறார். அப்படி வி.குமாரிடம் அவர் கிட்டாரிஸ்டாக பணியாற்றியபோது பாடகி பி சுசீலா ஒரு பாடலை பாட வந்திருக்கிறார். அப்போது அந்தப் பாடல் பல்லவியை பாடிய சுசீலா, சரணத்தை பாடாமல் விட, ஏன் பாடவில்லை என்று இசையமைப்பாளார் வி.குமார் கேட்க, அதற்கு கிட்டாரிஸ்டாக இருந்த இளையராஜா தான் காரணம் என கைகாட்டி இருக்கிறார் சுசீலா.
வழக்கமாக கிட்டார் வாசிப்பவர் தான் எனக்கு கார்டு கொடுப்பார்கள். ஆனால் இளையராஜா எனக்கு கார்டு கொடுக்கவில்லை. அதனால் தான் என்னால் சரணம் பாட முடியவில்லை என பி.சுசீலா சொல்ல, அதைக் கேட்டு கடுப்பான இளையராஜா, அவர் வேண்டுமென்றே என்மீது பழிபோடுகிறார் என்று பதிலுக்கு சொல்ல, இருவருக்கும் இடையே அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது நான் இங்கு கிட்டார் வாசிக்க தான் வந்திருக்கிறேன், சும்மா இருப்பதற்காக வரவில்லை என்று கோபத்தில் பி சுசீலாவை எதிர்த்து பேசி இருக்கிறார் இளையராஜா.
44
P Susheela Fight with Ilaiyaraaja
இளையராஜா - பி சுசீலா இடையேயான விரிசலுக்கு இந்த மோதல் தான் காரணம் என கூறப்படுகிறது. இதனாலேயே பி சுசீலாவுக்கு பதிலாக பாடகி எஸ்.ஜானகிக்கு அதிக பாடல்களை பாட இளையராஜா வாய்ப்பு கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் இளையராஜாவின் ஆஸ்தான பாடகியாகவே எஸ்.ஜானகி மாறிவிட்டார். பி.சுசீலாவை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு எஸ்.ஜானகியை முன்னணி பாடகியாக உயர்த்திய பெருமை இளையராஜாவையே சேரும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.