
தமிழ் சினிமாவில் அதிரடி நாயகனாகவும், வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்து பிரபலமான நெப்போலியன், தன்னுடைய மகன் தனுஷுக்கு வெகு விமர்சியாக திருமணம் செய்து வைத்த நிலையில், இது தான் கடந்த ஒரு வாரமாக தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. இந்நிலையில், தனுஷுக்கு.. அக்ஷயா கொடுத்த முதல் பரிசு என்ன? என்பதை, அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகர் நெப்போலியன் திருச்சியில் பிறந்து, சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். தொடர்ந்து வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த போது, 'சீவலப்பேரி பாண்டி' திரைப்படம் இவரை ஒரு ஹாரோவாக பார்க்க வைத்தது. இந்த படத்திற்கு பின்னர் பல படங்களில் ஹீரோவாக நடிக்க துவங்கினார்.
இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நெப்போலியன், கடந்த 1993 ஆம் ஆண்டு ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜெயசுதா, "நெப்போலியன் திரைப்படங்களில் வில்லனாக நடிப்பதால், ஆரம்பத்தில் இவரை திருமணம் செய்து கொள்ள மறுத்தாலும், பின்னர் திரையில் பார்ப்பது போல் நெப்போலியன் நிஜ வாழ்க்கையில் கிடையாது, என்பதை அவருடைய தந்தை புரிய வைத்த பின்னரே, திருமணத்திற்கு சம்மதம் கூறினாராம்". இந்த தகவலை அவரே தன்னுடைய பேட்டி ஒன்றிலும் கூறியிருக்கிறார்.
பாடகி மட்டுமில்ல நடிகையாகவும் ஒரே ஒரு படத்தில் நடித்த பி.சுசீலா! பலரும் அறிந்திடாத தகவல்கள்!
சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் போதே, தன்னுடைய மாமா கே என் நேரு மூலம் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்த, நெப்போலியன் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக மாறினார். பின்னர் பெரம்பூர் தொகுதியில் லோக்சபா எலெக்ஷனில் போட்டியிட்டு, எம்.பி-ஆனார். மத்திய இணை அமைச்சராகவும் 5 ஆண்டுகள் பணியாற்றிய நெப்போலியன், தன்னுடைய மகன்களின் விருப்பத்திற்காக முழுவதுமாக அரசியலில் இருந்து விலகிய நிலையில் ... அவ்வபோது திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார்.
நடிகர், அரசியல்வாதி என்பதை விட, ஒரு சிறந்த தந்தையாக இருக்க விரும்பிய நெப்போலியன்... தன்னுடைய மகன்களின் சந்தோஷத்திற்காகவும், மகன் தனுஷின் சிகிச்சைக்காகவும் அமெரிக்காவில் குடியேறினார். பின்னர் அங்கு ஒரு ஐடி நிறுவனத்தையும் தொடங்கி, வெற்றிகரமான தொழிலதிபராக மாறினார். ரூ.1000 கோடி முதல் ரூ.1500 கோடி வரை சொத்துக்கு அதிபதியாக உள்ள இவர், தன்னுடைய மகன் தனுஷ் திருமண வயதை எட்டியதால் அவருக்கு தன்னுடைய உறவினர் பெண்ணான அக்ஷயா என்பவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார்.
விவாகரத்தான நடிகரை ரூ.3310 கோடி சொத்துக்காக வளைத்து போட்டாரா? யார் இந்த தமிழ் பட ஹீரோயின்?
அதன்படி அக்ஷயா - தனுஷ் திருமணம் ஜப்பானில் வெகு விமர்சியாக நவம்பர் 7-ஆம் தேதி நடந்து முடிந்தது. இவர்களுடைய திருமணத்தில் கோலிவுட் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், நெப்போலியன் மகனின் திருமண செலவு மட்டும், சுமார் 332 கோடி ஆனதாக தகவல்கள் வெளியானது.
திருமணத்திற்கு பின்னர் அக்ஷயா மற்றும் தனுஷ் ஜோடிகள் இணைந்து, சில பேட்டிகள் கொடுத்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் அக்ஷயா கொடுத்த பேட்டி ஒன்றில், தனுஷுக்கு முதல் முதலாக கொடுத்த பரிசு என்ன? என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்க்கு பதிலளித்த அக்ஷயா, எனக்கு ஓவியத்தில் ஆர்வம் அதிகம். எனவே தன்னுடைய கையால் தனுஷின் முகத்தை வரைந்து, அதையே அவருக்கு பரிசாக கொடுத்தேன் என கூறியுள்ளார்.
இது உண்மையிலேயே விலைமதிப்பற்ற பரிசு என ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.தனுஷ் - அக்ஷயா திருமணத்தை ஒரு சிலர் தொடந்து விமர்சித்து வரும் போதிலும், இன்னும் சிலர் நெப்போலியன் ஒரு சிறந்த தந்தையாக தன்னுடைய மகனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து வைத்துள்ளார். இது பற்றி விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என அவருக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஜான்வி கபூர் அந்த இடத்தை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்தாரா? தீயாய் பரவும் புகைப்படம்!