
Amaran Box Office Collection : கோலிவுட் சினிமாவில் இப்போது ஹாட் டாபிக் யார் என்றால் அது நம்ம சிவகார்த்திகேயன் தான். முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமான அமரன் தான் அதற்கு முக்கிய காரணம். கடந்த 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த அமரன் இப்போது ரூ.255.25 கோடி வரையில் வசூல் குவித்து சரித்திரம் படைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யின் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது. தளபதி விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்ததும், சிவகார்த்திகேயனின் அமரன் ரூ.250 கோடி வசூல் குவித்ததும் ஒன்றாக இணைந்து சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல காரணமாக அமைந்துவிட்டது.
தளபதி விஜய் அண்ட் சிவகார்த்திகேயன்
ஏற்கனவே கோட் படத்தில் துப்பாக்கியை கையில் கொடுத்து உங்களை நம்பி தான் போறேன், இனி நீங்க தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விஜய் டயலாக் பேசுவதும், பதிலுக்கு சிவகார்த்திகேயன் டயலாக் பேசுவதும் கோலிவுட் வட்டாத்தில் விஜய் தனது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துவிட்டார் என்று பரவலாக பேச்சு அடிபடுகிறது.
சிவகார்த்திகேயன் படங்கள்:
இதுவரையில் சிவகார்த்திகேயன் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் எல்லாம் அமரன் படம் அளவிற்கு வசூல் குவிக்கவில்லை. அதே போன்று விமர்சனமும் பெறவில்லை. அமரன் படம் மட்டுமே எதிர்மறை விமர்சனத்தை பெறவில்லை. இன்னமும் படம் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அமரன் – இராணுவ வீரரின் கதை:
முழுக்க முழுக்க இராணுவ வீரர்களின் வாழ்க்கையை உணர்ச்சிப்பூர்வமாகவும், யதார்த்தமாகவும் பிரதிபலிக்கும் வகையில் வெளிக்காட்டிய படம் தான் அமரன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு ராணுவ வீராகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். இதுவரையில் எத்தனையோ படங்கள் ஆர்மி கதையை மையப்படுத்தி வெளியாகியிருந்தாலும் கூட ரசிகர்களை கொண்டாட வைத்த படம் என்றால் அது அமரனாக அமைந்துவிட்டது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை:
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த அமரன் ரூ.250 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. இது தான் சிவகார்த்திகேயனின் முதல் படன் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் குவிப்பது. இதற்கு முன்னதாக டான், டாக்டர், அயலான், ரெமோ என்று எந்தப் படமும் ரூ.120 கோடி வசூலை தாண்டவில்லை. அதிகபட்சமே ரூ.120 கோடி தான் என்று இருந்தது. ஆனால், அமரன் சிவகார்த்திகேயனை ரூ.250 கோடி வசூல் கொடுத்த மாஸ் ஹீரோக்களின் பட்டியலில் இணைய வைத்துள்ளது.
அந்த பட்டியலில் விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல் ஹாசன், தனுஷ், சூர்யா என்று மாஸ் ஹீரோக்கள் இருக்கும் நிலையில் தற்போது சிவகார்த்திகேயனும் அமரன் படம் மூலமாக இணைந்துள்ளார்.
வளர்ந்து வரும் மாஸ் ஹீரோ:
அமரன் படம் ரூ.250 கோடி வசூல் சாதனை படங்களின் பட்டியலில் இணைந்தது சிவகார்த்திகேயனின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எடுத்துக்காட்டுகிறது. இதன் மூலமாக ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகிய மாஸ் ஹீரோக்களின் பட்டியலில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.
அமரன் ரூ.300 கோடியை எட்டுமா?
அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த நிலையில் வெற்றிகரமாக இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி இன்றுடன் 13 நாட்கள் ஆன நிலையில் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது. இனி வரும் நாட்களில் அமரன் ரூ.300 கோடி வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.