முதல் தமிழ் படமே ஹிட் படம் – புத்தம் புதிய சொகுசு காரை வாங்கிய அமரன் சாய் பல்லவியின் அண்ணன்!

Published : Nov 13, 2024, 02:34 PM ISTUpdated : Nov 13, 2024, 02:37 PM IST

Shyam Mohan New Volkswagen Taigun Car : பிரேமலு மற்றும் அமரன் ஆகிய படங்களில் நடித்திருந்த நடிகர் ஷியாம் மோகன் புதிதாக வோல்க்ஸ்வேகன் டைகன் காரை வாங்கியுள்ளார்.

PREV
14
முதல் தமிழ் படமே ஹிட் படம் – புத்தம் புதிய சொகுசு காரை வாங்கிய அமரன் சாய் பல்லவியின் அண்ணன்!
Shyam Mohan, New Volkswagen Taigun Car

Shyam Mohan New Volkswagen Taigun Car: பிரேமலு படம் மூலமாக அதிகளவில் பிரபலமானவர் நடிகர் ஷியாம் மோகன். இந்தப் படம் கொடுத்த சூப்பர் ஹிட் வரவேற்பு அவரை தமிழுக்கு கொண்டு வந்தது. மலையாளத்தில் வெளியான பிரேமலு படம் ரூ.136 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைத்தது. கிரிஸ் ஏடி இயக்கத்தில் முழுக்க முழுக்க ரொமாண்டிக் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் நஸ்லன் மற்றும் மமிதா பைஜூ இருவரும் முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.

24
Shyam Mohan buys New Car

ஷியாம் மோகன் ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து நுனக்குழி என்ற படத்தில் நடித்திருந்தார். பிரேமலு கொடுத்த வரவேற்பு அமரன் படத்தில் நடித்திருந்தார். கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த மறைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமான அமரன் படத்தில் நடித்திருந்தார். அதுவும் சாய் பல்லவின் சகோதரராக நடித்திருந்தார். இந்தப் படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட சிறிய கதாபாத்திரத்தையும் பெரிதாக எடுத்துக் கொண்டு தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

34
Shyam Mohan, Amaran Movie

முதலில் சாய் பல்லவியின் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கும் ஷியான் மோகன் அதன் பிறகு சம்மதம் தெரிவிப்பார். அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அதுமட்டுமின்றி இராணுவ வீரர்களுக்கும் பெருமை சேர்த்து கொடுத்துள்ளார். உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் தற்போது வரையில் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது. அமரன் வெளியாகி இன்றுடன் 13 நாட்கள் ஆன நிலையில் ரூ.255.25 கோடி வசூல் குவித்துள்ளது.

44
Premalu Actor Shyam Mohan

சிவகார்த்திகேயனின் ஒரு படம் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் குவிப்பது இதுவே முதல் முறையாகும். சிவகாரத்திகேயனின் அமரன் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து ஷியாம் மோகன் புதிதாக வோக்ஸ்வேகன் காரை வாங்கியுள்ளார். வோக்ஸ்வேகன் டைகன் என்ற பெட்ரோல் வேரியண்ட் காரை தனது மனைவியுடன் சென்று வாங்கிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories