Published : Jun 27, 2023, 10:10 PM ISTUpdated : Jun 27, 2023, 10:14 PM IST
நடிகை மாதவி, தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, மகளை நினைத்து பெருமை படுவதாக போட்டுள்ள பதிவை கண்டு ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
80-களில் கவர்ச்சி நாயகிகள் என சிலர் இருந்த போதிலும், ஹீரோயினாக இருந்தாலும்... தயங்காமல் கவர்ச்சியை தன்னுடைய படங்களில் வாரி இறைந்து பிரபலமானவர் தான் மாதவி. 2 பீஸ் உடையில் கூட நடித்து அப்போதைய ரசிகர்களை வாய் பிளக்க வைத்தார்.
27
ஆந்திராவை சேர்ந்த இவர், தெலுங்கு மொழி படத்தின் மூலம் 1976-ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார். இதை தொடர்ந்து, இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவே... தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார்.
குறிப்பாக தமிழில் 1981 ஆம் ஆண்டு வெளியான புதிய கோணங்கள் என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும் படி வெற்றிபெறவில்லை என்றாலும், அடுத்தது தமிழில், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அந்த காலத்தில் பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கி உள்ளார் மாதவி.
47
அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே, நடிகை மாதவி கடந்த 1996 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரால்ப் சர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் முழுமையாக திரையுலகில் இருந்து விலகிய இவர், குடும்பத்துடன் நியூஜெர்சியில் வசித்து வருகிறார்.
மேலும் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவ்வப்போது தன்னுடைய மகள்களின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள மாதவி, தற்போது மகள் குறித்து மிகவும் பெருமையாக, போஸ்ட் ஒன்றை போட்டுள்ளதற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
67
அதாவது மாதவியின் மூத்த மகள் பிரிசில்லா, இளங்கலை (UG) பட்டம் பெற்றுள்ளதை அடுத்து, அவருக்கு PG படிப்புக்கு உலகின் மிகச் சிறந்த பல்கலை கழகங்களான ஹார்வாட் மட்டும் ஆக்ஸ்போர்டு ஆகியவற்றில் இருந்து அழைப்பிதழ் வந்துள்ளதாகவும்... இதை நினைத்து ஒரு தாயாக மிகவும் பெருமை படுவதாக அறிவித்துள்ளார்.
தன்னுடைய மகள்கள் மூவருடைய புகைப்படங்கள் சிலவற்றை இவர் வெளியிட... உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருவதோடு, அவரின் மூத்த மகளுக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.