சூர்யா சொல்லியும் கேட்கல... அரசியல் புரிதல் இல்லாம தப்பு பண்ணிட்டேன் - உதயநிதியை வருத்தப்பட வைத்த ஏழாம் அறிவு

First Published | Jun 27, 2023, 3:53 PM IST

7ஆம் அறிவு திரைப்படத்தில் இடம்பெற்ற இட ஒதுக்கீடுக்கு எதிரான வசனத்தை நீக்க மறுத்தது குறித்து உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளராக இருந்து ஹீரோவாக மாறியவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது அரசியலில் பிசியாகிவிட்டதால் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலக முடிவெடுத்துள்ளார். தற்போது திமுக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின், தமிழ் சினிமாவில் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் தான் மாமன்னன். கர்ணன், பரியேறும் பெருமாள் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தான் இப்படத்தை இயக்கி உள்ளார்.

உதயநிதியின் கடைசி படம் என்பதால் இதனை பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கி உள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, பகத் பாசி, லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இத்திரைப்படம் வருகிற ஜூன் 29-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... விரைவில் துவங்கவிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 - கோவை பெண் ஓட்டுநர் தான் முதல் வரவா?

Tap to resize

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏழாம் அறிவு படம் குறித்து பேசி உள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதில் அவர் கூறியதாவது : “ஏழாம் அறிவு படத்தில் ஒரு டயலாக் இருக்கும். சமூக நீதியை, இட ஒதுக்கீட்டை விமர்சித்து அந்த வசனம் இடம்பெற்று இருக்கும். அந்த டயலாக்கை ஸ்ருதிஹாசன் பேசி இருப்பார். அந்த சமயத்தில் எனக்கு அரசியல் புரிதல் கிடையாது. சூர்யா சாரும் அந்த சீனில் இல்லை. படத்தின் ஷூட்டிங்கெல்லாம் முடித்து நான் படத்தை பார்த்தேன். எனக்கு எதுவும் தெரியல.

ஆனால் சூர்யா படத்தை பார்த்த உடன் எனக்கு போன் பண்ணினார். பாஸு இந்த படத்துல இட ஒதுக்கீடை விமர்சிப்பது போன்று ஒரு காட்சி வருகிறது. அது வேண்டாம் எடுத்திடலாம்னு சொன்னாரு. நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அது வெறும் டயலாக் தான விட்ருங்கனு சொல்லிட்டேன். அப்போ எனக்கு அரசியலில் அவ்வளவு அறிவு இல்லாததால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. அதன்பின்னர் காலங்கள் கடந்து செல்லும் போது தான் அது தப்புனு எனக்கு புரியவந்தது என உதயநிதி கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... கணவருடன் சண்டை... விவகாரத்துக்கு தயாராகும் நடிகை அசின்?

Latest Videos

click me!