நடிகை ரோஜா, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கிய 'செம்பருத்தி' படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் ரசிகர்களால் ஆண் அழகன் என அழைக்கப்படும் பிரஷாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் தன்னுடைய முதல் பட இயக்குனரான செல்வமணியை காதலிக்க துவங்கினார் ரோஜா. இவர்களின் காதல் கிசுகிசு ஒருபக்கம் புகைந்து கொண்டிருந்தாலும், இருவரும் தொடர்ந்து தங்களுடைய சினிமா கேரியரில் முழு கவனத்தையும் செலுத்தினர்.
இதை தொடர்ந்து தன்னுடைய காதலரான செல்வமணியை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகியும், திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டினார். திரையுலகை தாண்டி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் ரோஜா, ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார். தற்போது சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
மகனின் பிறந்தநாளை செம்ம கிராண்டாக ரோஜா தன்னுடைய வீட்டில் செலிபிரேட் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது ஒருபுறம் இருக்க, பலர் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.