90-களில் கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தான், நடிகை குஷ்பு. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்தி, என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டுள்ள இவர், தமிழை தொடர்ந்து, தெலுங்கு, ஹிந்தி, போன்ற மொழிகளிலும் நடித்து பிரபலமானவர்.
திருமணத்திற்கு பின்னர், ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், அக்கா, அண்ணி, போன்ற அழுத்தமான குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்தார். மேலும் பல சீரியல்களில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், உங்கள் அன்றாட வழக்கத்தை சீர்குலைத்து, ஒரு விசித்திரமான விபத்து உங்களை வலியில் ஆழ்த்தும் போது, ஒருவர் என்ன செய்வார்? மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் எனது பயணம் நிற்காமல் தொடரும், சாதிக்கும்வரை நிறுத்தமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அடுத்ததாக கோயம்புத்தூர், புதுடெல்லி, ஹைதராபாத், துபாய் ஆகிய இடங்களுக்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய முழங்கால் வலியோடு அதற்கான வலி நிவாரணியும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் இந்த வலி கூடிய சீக்கிரம் சரியாகிவிடும், உங்களின் உடல் நலனை கவனித்து கொள்ளுங்கள் என கூறி வருகின்றனர்.
KGF பட நடிகரை கரம் பிடித்த தமிழ் பட நடிகை ஹரிபிரியா..! ரசிகர்கள் வாழ்த்து..!