இவானா
கேரளா மாநிலம் சங்கனேச்சரி என்ற பகுதியில் கடந்த 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி பிறந்தவர் நடிகை இவானா. இவரது இயற்பெயர் அலீனா பேகம். பிகாம் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார்.
இவானா மாஸ்டர் மூவி
ழந்தைப் பருவம் முதலே சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.
ராணி பத்மினி
இந்தப் படத்தைத் தொடர்ந்து ராணி பத்மினி என்ற படத்தில் நடித்திருந்தார். இதே போன்று 2016 ஆம் ஆண்டு வெளியான மற்றொரு மலையாள படத்திலும் நடித்திருந்தார்.
இவானா - நாச்சியார்
இந்தப் படங்களைத் தொடர்ந்து தமிழில் ஜோதிகா நடிப்பில் திரைக்கு வந்த நாச்சியார் என்ற படத்தில் கோட்டை அரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாகவும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவர் ஜிவி பிரகாஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இவானா ஹீரோ மூவி
இந்தப் படம் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்திலும் நடித்திருந்தார். ஆனால், இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்படவில்லை. ஹீரோ படத்தைத் தொடர்ந்து 3 வருடங்களுக்கு இவானாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவானா லவ் டுடே
அதன் பிறகு தான் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிறந்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் இவானா, நிகிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவானா
காதலிக்கும் இருவரும், திருமணம் செய்து கொள்ளும் நிலைக்கு வரும் போது ஒருவருக்கொருவர் தங்களது செல்போனை மாற்றிக் கொண்டால் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.
இவானா கள்வன்
இவானாவின் விக்கிப்பீடியா பக்கத்தில் நிகிதா (மாமாகுட்டி லவ்வர்ஸ்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லவ் டுடே படத்தைத் தொடர்ந்து காம்ப்லெக்ஸ் மற்றும் கள்வன் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார்.
Lets Get Married
இது தவிர, தோனி தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் இவானா நடிக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இவான நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லவ் டுடே கொடுத்த வரவேற்பு, இவானாவிற்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இளம் வயதில் ஒவ்வொரு கதையும் கச்சிதமாக தேர்வு செய்து ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் நடித்து வருகிறார் நடிகை இவானா.