பிரபல திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் உடல்நல குறைவு மற்றும் வயது முதுமை காரணமாக நேற்று உயிரிழந்தார், தற்பொழுது சென்னை வடபழனி ஸ்டண்ட் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்டண்ட் இயக்குநர் ஜூடோ ரத்தினத்தின் உடலுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
இந்நிலையில் இவருடைய உடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி S.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, தளபதி தினேஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோர்கள் நேரில் சென்று மாலையிட்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்
அதே போல் இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் ஜூனோ கே.கே.ரத்னம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, 1976-ம் ஆண்டில் இருந்து அவருடன் பழக்கம் ஏற்பட்டது அவருக்கு என்று தனியாக ஒரு ஸ்டைல் உருவாக்கிக் கொண்டு அதை திரையுலகிலும் அறிமுகப்படுத்தினார்
ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசனின் பல படங்களுக்கும் ஜூடோ ரத்னம் சண்டை பயிற்சியாளராக இருந்துள்ள நிலையில், நடிகர் கமல்... தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "கடுமையான உழைப்பைக் கோரும் சண்டைப் பயிற்சியை உடல் வருத்தமாய்க் கொள்ளாமல் ஆரோக்கியத்துக்கான வழியாக்கிக் கொண்டவர் திரு ஜூடோ ரத்னம். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் அளவில் 1500 படங்களில் பணியாற்றியவர். மறைந்துவிட்டார். அவர்க்கென் அஞ்சலி" என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.