ஒருவராக நீண்ட காலம் ஆட்சி செய்தவர் ஜமுனா. அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி என்ற சாதனையை படைத்தார். அரசியலில் சிறந்து விளங்கினார். இவ்வளவு உயரத்தில் இருக்கும் ஜமுனா தனது வாழ்க்கையில் எத்தனை சொத்துக்களை குவித்துள்ளார் என்று பார்ப்போம்...
குறிப்பாக தமிழில், கடந்த 1954 ஆம் ஆண்டு வெளியான 'பணம் படுத்தும் பாடு' படத்தின் மூலம் அறிமுகமான இவர், பின்னர்.. மிஸ்ஸியம்மா, திருட்டு ராமன், பொம்மை கல்யாணம், தெனாலி ராமன், தாய் மகளுக்கு கட்டிய தாலி, நாளைய தீர்ப்பு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றவர்களுடன் நடித்துள்ளார்.
சாவித்ரி போன்ற நடிகைகள், தாங்கள் சம்பாதித்த பணத்தை தண்ணீர் போன்று செலவு செய்த நிலையில், வருங்காலத்தை எண்ணி, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும், ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றை அதிகம் சேர்த்து கொண்டவர் ஜமுனா. அதே போல் அதிகம் பணம் சேர்க்க வேண்டும் என்கிற ஆசையில் படம் தயாரிப்பு போன்றவற்றில் செலவிடாமல் சேமித்தவர்.
இவரின் சொத்து விவரங்கள் குறித்து வெளியான தகவலின்படி, ஜமூனுக்கு ஜூப்ளி ஹில்ஸில் பகுதியில் 2000 ஏக்கர் பரப்பளவில், சொகுசு வீடு உள்ளது. இதில் அனைத்து விதமான வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சில இடங்களில் பகுதியில் பங்களாக்கள் உள்ளது. கொண்டாப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜமுனா 1965 இல் ஜூலூரி ரமணா ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார் இவரின் கணவர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு மற்றும், உடல்நல பிரச்சனையால் அவதிப்படுவந்த ஜமுனா தன்னுடைய 86 வயதில் இன்று உயிரிழந்தார்.