முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான எம்.எஸ்.தோனிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இதனால் சென்னை மீது அவருக்கு எப்போதுமே தனி பாசம் உண்டு.
அந்த வகையில் கிரிக்கெட்டில் கலக்கிய தோனி, தற்போது சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். அவரது மனைவி சாக்ஷி நிர்வகித்து வரும் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அந்நிறுவனம் முதன்முதலில் தமிழ் படத்தை தான் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்... KGF பட நடிகரை கரம் பிடித்த தமிழ் பட நடிகை ஹரிபிரியா..! ரசிகர்கள் வாழ்த்து..!
Lets Get Married என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இப்படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக இவானா நடிக்க உள்ளாராம். இவர் கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஆவார்.