கடந்த 2007 ஆம் ஆண்டு துலுமொழியில் வெளியான படத்தின் மூலம் ஹீரோயினாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஹரிபிரியா.
கன்னட மொழியை தாண்டி, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்த துவங்கிய ஹரிப்பிரியா, நடிகர் கரனுக்கு ஜோடியாக... கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'கனகவேல் காக்க' படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்துளளது. இந்த திருமண விழாவில் கன்னட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு ஹரிபிரியா - வசிஷ்டா சிம்ஹாவை வாழ்த்தியுள்ளனர்.
தற்போது ஹரிபிரியா - வசிஷ்டா சிம்ஹா ஆகியோரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாக ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை இவர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.