லோகி சம்பவம் ஸ்டார்ட்... பிப்ரவரியில் வெளியாக உள்ள ‘தளபதி 67’ படத்தின் மூன்று தரமான அப்டேட்டுகள் என்னென்ன?

Published : Jan 27, 2023, 12:55 PM ISTUpdated : Jan 27, 2023, 12:57 PM IST

பிப்ரவரி 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் கூறி உள்ளதால், அது என்னென்ன அப்டேட் என்பதை தற்போது பார்க்கலாம். 

PREV
15
லோகி சம்பவம் ஸ்டார்ட்... பிப்ரவரியில் வெளியாக உள்ள ‘தளபதி 67’ படத்தின் மூன்று தரமான அப்டேட்டுகள் என்னென்ன?

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் விஜய்யின் தளபதி 67-ம் ஒன்று. லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள இப்படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடித்து வருகிறார். ஏற்கனவே விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

25

தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகிறார் என்கிற தகவல் கடந்த ஆண்டு வெளியானதில் இருந்தே விஜய் ரசிகர்கள் அப்டேட் எப்ப வரும் என கேட்டதால், டுவிட்டரில் இருந்தே வெளியேறிய லோகேஷ் கனகராஜ், தளபதி 67 அப்டேட் உடன் தான் மீண்டும் டுவிட்டரில் எண்ட்ரி கொடுப்பேன் என கூறிவிட்டு சென்றார். அவர் டுவிட்டரில் இருந்து வெளியேறி 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அப்டேட் வந்தபாடில்லை.

35

இதனால் பொறுமை இழந்த ரசிகர்கள், லோகேஷ் கனகராஜ் செல்லும் இடம்மெல்லாம் அப்டேட் கேட்டு நச்சரிக்க தொடங்கினர். இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும் என சொல்லிவந்த லோகேஷ் கனகராஜ், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் வெளியிடும் மைக்கேல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக கோவையில் தான் பயின்ற கல்லூரிக்கு சென்ற லோகேஷ் கனகராஜ், ஒருவழியாக தளபதி 67 அப்டேட்டையும் வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்... ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம் மறைவு.. கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் - முதல்வரும் இரங்கல் தெரிவித்தார்

45

அந்த விழாவில், தளபதி 67 படத்தின் அப்டேட் வருகிற பிப்ரவரி 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வெளிவரும் என கூறி இருந்தார். அதுமட்டுமின்றி தளபதி 67-ல் சீயான் விக்ரம் நடிப்பதாக கேள்விப்படுகிறோம் அது உண்மை தானா என்கிற கேள்விக்கு, நானும் அப்படிதான் கேள்விபட்டேன் என பதிலளித்த லோகேஷ், வருகிற அப்டேட்டில் அதெல்லாம் தெரியவரும் என கூறினார்.

55

லோகேஷ் கனகராஜ் பிப்ரவரி 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அப்டேட் வெளியாகும் என கூறி உள்ளதால், அது என்னென்ன அப்டேட் என்பதை தற்போது பார்க்கலாம். அதன்படி பிப்ரவரி 1-ந் தேதி அப்டேட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம். அதேபோல் பிப்ரவரி 2-ந் தேதி தளபதி 67 பட பூஜையின் போது எடுத்த வீடியோவையும், படக்குழு குறித்த விவரங்களையும் வெளியிட உள்ளார்களாம். இதையடுத்து இறுதியாக பிப்ரவரி 3-ந் தேதி விக்ரம் படத்திற்கு வெளியிட்டது போல் தளபதி 67-க்கும் பிரத்யேகமான மாஸ் புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இந்த புரோமோ வீடியோ 67 விநாடிகள் ஓடக்கூடிய அளவு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... இது முடிவுக்கு வராது-மயோசிடிஸ் நோய்க்கு பிறகு கடும் உடற்பயிற்சி, புது டயட்னு ஆளே மாறிபோன சமந்தா சொன்ன சீக்ரெட்

Read more Photos on
click me!

Recommended Stories