நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். டாக்டர், டான் என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த அவர், கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்ததால் ஹாட்ரிக் வெற்றியை நழுவவிட்டார். பிரின்ஸ் பட தோல்விக்கு பொறுப்பேற்று அதற்காக விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடும் வழங்கி இருந்தார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில், நேற்று குடியரசு தினத்தன்று சிவகார்த்திகேயனின் அக்காவுக்கு சிறந்த டாக்டர் விருது வழங்கப்பட்டு உள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வரும் சிவகார்த்திகேயனின் அக்கா கெளரிக்கு தமிழக அரசு, சிறந்த மருத்துவர் விருது வழங்கி கவுரவித்துள்ளதை மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள சிவகர்த்திகேயன், அதில் தனது அக்காவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.