பாலிவுட் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் ஷாருக்கான். 2018-ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியாகி படு தோல்வி அடைந்த ஜீரோ படத்துக்கு பின், கடந்த 4 ஆண்டுகளாக ஷாருக்கான் ஹீரோவாக நடித்த படங்கள் ஒன்று கூட ரிலீஸ் ஆகவில்லை. இதனால் கடும் அப்செட்டில் இருந்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வெளியாகி உள்ள படம் தான் பதான்.
வெளியானது முதலே பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்று வரும் பதான் திரைப்படம் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. அதன்படி முதல்நாளிலேயே இப்படம் உலகளவில் ரூ.106 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதல்நாளில் ரூ.100 கோடிக்கு மேல் கலெக்ஷன் அள்ளிய முதல் இந்தி படம் என்கிற சாதனையை இதன்மூலம் நிகழ்த்திக் காட்டியது பதான்.